News

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மீது கொடுக்கப்பட்ட பரபரப்பு புகார்..! கதரும் சக கலைஞர்..!

Published on

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிடி இசை நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி வருகின்றனர். அவர்கள் சினிமாத்துறையிலும் புகுந்து பெரிய அளவில் புகழடைகின்றனர்.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி கிராமிய இசைக்கலைஞர்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்கள். இவர்கள் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மிகச் சிறந்த பாடல்களை பாடி, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்கள். இதில் டைட்டில் வின்னராக செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு பல பொது நிகழ்ச்சிகளில், கோவில் திருவிழாக்களில், வெளிநாடுகளுக்கும் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகின்றனர் இவர்கள் பாடலுக்கு என்று, தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.

குறிப்பாக இசை கிராமிய இசைக்கலைஞர்களான இவர்களே சொந்தமாக பாட்டு எழுதி, மெட்டு போட்டு பாடுவது இவர்களின் ஸ்பெஷலாக இருக்கிறது.

புஷ்பா படத்தில்…

அதே போல் இருவரும் சினிமாவிலும் பாடி வருகின்றனர். குறிப்பாக ராஜலட்சுமி, புஷ்பா படத்தில் கதாநாயகி பாடும், நீ அம்மு அம்மு சொல்லையில பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி, என்ற ஹிட் பாடலை பாடியிருந்தார். இதே போல் சினிமாவில் தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார்.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற கிராமிய இசைக்கலைஞர்களாக வலம் வருகின்றனர்.

மதுர

இதே போல், நாட்டுப்புற பாடகி மதுர மல்லி என்பவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். மாமான்னு கூப்பிட தான் மனசு சொல்லுது என்ற பாடலை பாடி அந்த வீடியோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யூ டியூப்பில் வெளியிட அது 2 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது…

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கோவில் விழாவில் பாடிய நாட்டுப்புறப் கலைஞர்கள் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தம்பதி, மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்கிற பாடலை பாடினர்.

அப்போது தன்னுடைய தங்கை கலைவாணி என்பவர்தான் இந்த பாடலை இயற்றியதாக ராஜலட்சுமி கூறியதுதான் தற்போது சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

மிகவும் கீழ்த்தரமானது

இதனால் ஆத்திரமடைந்த இந்த பாடலை இயற்றி பாடிய மதுர மல்லி தன்னுடைய பாடலுக்கு, வேறு ஒரு பெண்ணை சொந்தம் கொண்டாட வைப்பது மிகவும் கீழ்த்தரமானது. இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும்…

ஏன்னுடைய பாடலுக்கு வேறு ஒருவரை சொந்தம் கொண்டாட வைத்தது என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சலை தந்துள்ளதாகவும், ராஜலட்சுமி தன்னுடைய தவறை உணர்ந்து கூறிய வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.

அது மட்டுமின்றி அதற்கு உரிய விளக்கமும் கொடுக்க வேண்டும் என மதுர மல்லி தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புற கவிஞர் செல்ல தங்கையா என்பவரின் பாடல் வரிகளுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்து பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தற்போது இந்த சர்ச்சையில் சிக்கிள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசில் புகார்

மேலும் மதுர மல்லி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த பாடல் குறித்த உண்மை தெரியாமல் வாயை விட்டதால் ராஜலட்சுமி, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மீது போலீசில் கொடுக்கப்பட்ட பரபரப்பு புகாரால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். என்னுடைய பாடலை இவர்கள் எப்படி சொந்தம் கொண்டாடலாம் என கதறுகிறார் சக கலைஞரான மதுரமல்லி.

Ocean
Exit mobile version