வாழ்நாளில் சிறந்த பரிசு.. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய சீரியல் நடிகர் தினேஷ்..!

கணவன் மனைவி என ஜோடியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சீரியல் நடிகர் தினேஷ் மற்றும் ரக்ஷிதா.

இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம் “என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள்.

சீரியல் நடிகர் தினேஷ்:

அதில் நெருக்கமாக பழகி காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் .

திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ஜோடியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினேஷ் – ரக்ஷிதா இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

தினேஷுக்கு ரக்ஷிதாவை பிரிய விருப்பமே இல்லை. இப்போதும் அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறார் .

ரக்ஷிதா – தினேஷ் பிரிவு:

ஆனால், ரக்ஷிதா தினேஷ் வேண்டாம் என ஒரு முடிவோடு ஒதுங்கிவிட்டார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் இருவரும் மூலமாக மேலும் பிரபலமாகினார்கள்.

முன்னதாக தினேஷ் யார் என்று பெரிதாக ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் அவரது சிறந்த குணம் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போனது.

மேலும், தினேஷ் போன்ற நல்ல மனிதருடன் ரக்ஷிதா நிச்சயம் சேர்ந்து வாழ்ந்தால் அவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து ரக்ஷிதா அடுத்தடுத்த சீரியல் நடித்து வருகிறார். அதேபோல் தினேஷும் ஒரு சில சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை ரக்ஷிதா புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக கூறி அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றிருந்தார்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தினேஷ்:

தற்போது அடுத்தபடியாக தினேஷம் தனது அம்மாவின் கனவு , ஆசையான புதிய கார் ஒன்றை வாங்கி அவரை மிகுந்த மகிழ்ச்சி படுத்திருக்கிறார் .

இதையடுத்து தினேஷிற்கு அவருக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கார் வாங்கிய போது தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தினேஷ் தனது instagram-ல் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த காரின் விலை ரூ. 26 இலட்சம் எனக் கூறப்படுகிறது. கார் வாங்கிய போது தனது தாய் தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் நடிகர் தினேஷ்…” உங்கள் வாழ்நாளில் நீங்கள் பெரும் மிகச் சிறந்த பரிசு உங்கள் பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்கள் தான்” என பதிவிட அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version