விபச்சார வழக்கில் கைதான சீரியல் நடிகை… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

90ஸ் காலகட்டத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் தேவி பிரியா.

இவர் பல தொடர்களில் பிசியாக நடித்த அசத்தி இருந்தார். குறிப்பாக வில்லி கேரக்டருக்கு இவர் பக்காவாக பொருந்துவார்.

சீரியல் நடிகை தேவி பிரியா:

சீரியல்களில் வில்லி ரோல் என்றாலே உடனே தேவிப்பிரியாவை தான் தேடி சென்று ஒப்பந்தம் செய்வார்கள். அந்த அளவுக்கு இவர் பிரபல வில்லி நடிகையாக பெரும் புகழ்பெற்றார்.

மேலும் இவர் குணச்சித்திர நடிகையாகவும், சீரியல் ஹீரோயின் ஆகவும் , வில்லியாகவும் கூட நடித்திருக்கிறார் .

எந்த விதமான கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் தேவி பிரியா.

மிகச் சிறந்த நடிப்புக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்ற சீரியல் நடிகையாகவும் பாராட்டுகளை பெற்றார்.

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

வில்லியாக அசத்திய தேவி பிரியா:

அத்துடன் இவர் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திடாத உண்மை. சீரியல் நடிகை ஆவதற்கு முன்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி வந்தார் தேவி பிரியா.

பாரதிராஜா இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “தெக்கத்தி பொண்ணு” என்ற சீரியலில் தேவி பிரியாவின் கேரக்டர் மிக முக்கிய பங்கு வகித்தது.

அவருக்கு அந்த சீரியல் பெரும் அடையாளமாகவும் மாறியது. தொடர்ந்து பல சீரியல் வாய்ப்புகள் தேடி வர துவங்கியது.

இதனுடைய அவர் கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தான் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசி அதிர்ச்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீரியல் நடிகை தேவிப்பிரியா குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் ” விபச்சார வழக்கில் தேவி ப்ரியா கைது செய்யப்பட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

விபச்சார வழக்கில் தேவி பிரியா:

சீரியல் நடிகை தேவிப்பிரியா வில்லியானாலும் கதாநாயகி ஆனாலும் குணச்சித்திர நடிகையானாலும் அனைத்திலும் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

குறிப்பாக போலீஸ் கெட்டப் அவருக்கு பக்காவாக பொருந்தும் என பயில்வான் பேசினார். தேவிப்பிரியா சென்னை மாநகராட்சி உறுப்பினர் ஒருவரின் மகன் உடன் மிக நெருக்கமாக இருந்தார்.

இருவரும் ரகசியமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூட செய்திகள் வெளியானது. இது பிடிக்காத சென்னை மாநகராட்சி பெண் உறுப்பினர் போட்டுக் கொடுத்து தேவிப்பிரியாவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தார்.

வழக்கம்போல சீரியல் நடிகை தேவிப்பிரியா அந்த விபச்சார வழக்கை துணிச்சலோடு எதிர்த்து போராடி தான் ஒரு நிரபராதி எனக் கூறி வெளியில் வந்தார்.

இப்போதும் அவர் மிகவும் துணிச்சலான பெண் சமூக போராளி, மிகச்சிறந்த நடிகை எனத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் என்றார் பயில்வான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version