ரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளை போலவே சீரியல் நடிகைகளுக்கும் தற்போது செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகையான தீபா தற்போது கூறி இருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “கல்யாணம் பண்ணா இது போயிடுமா..” நடிகர் விஜய் பதிலை பாருங்க..
சீரியல் நடிகை தீபா..
அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட சீரியல் நடிகை தீபா இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படக் கூடிய நடிகையாக திகழ்கிறார்.
இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து 15 வயதில் மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பேசும் பொருளாக மாறிவிட்டதோடு திருமண வயதில் மகன் இருக்கும் போது இவர் எப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அனாதையா நடுரோட்டில் நின்னேன்..
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய சீரியல் நடிகை தீபா தனக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்து அடுத்த வருடமே குழந்தையும் பிறந்து விட்டது என கூறினார். அத்தோடு திருமண வாழ்க்கை தான் நினைத்த படி அமையவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் இவரது 23 வயதிலேயே திருமண வாழ்க்கை முற்றுப்பெற்றதை அடுத்து தனது மகனின் வயது 5 தான் அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடு தெருவில் நின்றது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.
அந்த சமயத்தில் தான் எதற்கு நாம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், அப்போது எனக்கு தைரியம் கொடுத்தது என் பையன். அவனுக்காகத்தான் நான் இப்போது வரை உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற விஷயத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.
தீபா கண்ணீர் பேட்டி..
அத்தோடு சினிமா துறைக்கு வந்து 18 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்படுவதாகவும் தற்போது திரைத்துறையில் ஊந்த அளவு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அது கஷ்டப்பட்டு தான் நடந்துள்ளது என்பதையும் கூறி இருக்கிறார்.
அத்துடன் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவருடைய வலி தெரியாது என்றும் தனியாக ஒரு பெண் எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
யாரிடம் உதவி கேட்டாலும் அவர்களின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பார்வைகளை சமாளித்து வருவதே ஒரு மிகப்பெரிய வேலையாகி விட்டது.
இதனை அடுத்து தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அப்போது இவ்வளவு பெரிய மகன் இருக்கும் போது இந்த திருமணம் தேவையா என்று பலரும் பல வகைகளில் கேள்வி எழுப்பினார்கள். என் மகன், என் அப்பா இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார்கள் அதனால் தான் அந்த திருமணத்தை செய்தேன்.
எனினும் ஆந்த திருமணத்தை ஏன் செய்தோம் என்று பலமுறை நினைத்து வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. என் மகனுக்காக தான் நான் வாழ்கிறேன் என்று கூறியது பலரையும் கண் கலங்க வைத்து விட்டது. அத்தோடு மகனும் அவரும் சேர்ந்து நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை போட்டதை பார்த்து பலரும் மோசமான கமெண்ட்களை வெளியிட்டார்கள்.
அதை பார்த்து கலங்கிய நான் இப்படி மனுஷங்கள் இருப்பாங்களா? என்று மனது பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பியதாக பேட்டியில் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
இதையும் படிங்க: இனிமே கல்யாணத்தை பத்தி கேள்வி கேப்பீங்க.. சிம்புவின் வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி..!