சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் காயத்ரியா இது..? ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். காயத்ரி யுவராஜ் சன் டிவியில் நிறைய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவராக இவர் இருக்கிறார்.

1988 இல் பிறந்த காயத்ரி கல்லூரி படிப்பை முடித்த பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார். அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. சீரியல்களை பொறுத்தவரை எப்பொழுதுமே நடிகைகளுக்கு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும்.

காயத்ரி யுவராஜ்:

ஏனெனில் புதுப்புது சீரியல்களில் புதுப்புது முகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதால் சீரியல் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதேபோல புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து கொண்டுதான் இருக்கும்.

அதிலும் அதிகபட்சம் தான் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது ஒவ்வொரு புது சீரியலிலும் கதாநாயகியாக வரும் நடிகைகள் இதுவரை எந்த சீரியலிலும் நடிக்காதவர்களாக இருப்பதை பார்க்க முடியும். முதன் முதலாக சன் டிவியில் 2009 இல் வெளியான தென்றல் என்கிற சீரியலில் நிலா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் காயத்ரி யுவராஜ்.

குடும்ப பாங்கினியாக நடிகை:

இந்த கதாபாத்திரத்திற்கு அப்பொழுது கொஞ்சம் வரவேற்பும் கிடைத்தது அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அழகி என்கிற சீரியலில் நடித்தார் காயத்ரி யுவராஜ். இந்த சீரியலை பொருத்தவரை 2011 முதல் 2016 வரை வெற்றிகரமாக இந்த சீரியல் ஓடியது.

மேலும் 1100 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் வெற்றி கொடுத்தது இவருக்கும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இதனை தொடர்ந்து மோகினி, பிரிய சகி போன்ற சீரியல்களில் இவர் நடித்து வந்தார் கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து விஜய் டிவியில் வரவேற்பை பெற்றார் காயத்ரி யுவராஜ். தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான மிஸ்டர் மிஸஸ் கில்லாடி நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

வாயை பிளந்த ரசிகர்கள்

இப்படி இருக்கும் பொழுது 2020இல் வெளியான சித்தி 2 சீரியலில் வில்லியாக களமிறங்கினார் காயத்ரி யுவராஜ் அது அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. மீண்டும் அவருக்கு சன் டிவியில் வாய்ப்புகள் வருவதற்கு சித்தி 2 காரணமாக இருந்தது.

ஆனால் பாதியிலேயே சித்தி நாடகத்திலிருந்து ராதிகா விலகி விட்டதால் இந்த சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்துவிட்டது. அதற்குப் பிறகு மீண்டும் விஜய் டிவிக்கு சென்ற காயத்ரி யுவராஜ் அங்கு நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியலில் நடித்து வந்தார்.

தொடர்ந்து இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்னதான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்றாலும் கூட காயத்ரி யுவராஜின் புகைப்படங்களை பார்க்கும் யாரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு மிக அழகாக இருக்கும் காயத்ரி யுவராஜ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version