பாரு.. எவ்ளோ பெருசா இருக்க.. உன்னோட உடம்பு.. விவாகரத்து குறித்து வாய் திறந்த கிருத்திகா அண்ணாமலை..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தற்போது குடும்பப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு  உள்ளது.  அந்த வகையில் சீரியல் நடிகையான கிருத்திகா அண்ணாமலை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தனது சிறப்பான நடிப்பை சீரியல்களில் வெளிப்படுத்தி பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அந்த வகையில் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கும் இவரது பர்சனல் லைஃப் பற்றி அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார்.

நடிகை கிருத்திகா அண்ணாமலை..

நடிகை கிருத்திகா அண்ணாமலை சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இந்த சீரியல் மட்டுமல்லாமல் பல சீரியல்களில் இவர் வில்லியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

பொதுவாகவே பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொசிஷனில் இருக்கும் பெண்களுக்கு மண வாழ்க்கை சரியாக அமையாது. அந்த வகையில் நடிகை கிருத்திகா அண்ணாமலை தனக்கு ஏன் விவாகரத்து நடந்தது.. இதனால் தான் விவாகரத்து செய்தேன் என்ற விஷயத்தை அண்மை பேட்டியில் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

அது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு பெருசா இருக்க..

இந்த பேட்டியில் அவர் பேசும் போது சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் என்னுடைய உடல் எடையானது 83 கிலோ என்ற அளவில் இருந்தது.

மேலும் அந்த சீரியலில் அக்கா பாத்திரத்தில் நடிக்க வேண்டிய தோற்றம் என்பதால் இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்காக உடல் எடையெல்லாம் குறைக்க வேண்டாம் என்று இயக்குனர் என்னிடம் கூறிவிட்டார்.

எனினும் என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்கு.. என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் எப்போதும் உருவ கேலி செய்வதை தொடர் கதையாக மாற்றினார்.

இதனை அடுத்து எவ்வளவோ பொறுத்து போன நான் ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியாமல் போனதை அடுத்து இருவர் இடையே மிகப்பெரிய சண்டைகள் வந்தது. மேலும் வாய் பேச்சு முற்ற ஆரம்பித்தது விவகாரம் வேறு வகையாக மாறியது.

விவாகரத்து குறித்து வாய் திறந்த கிருத்திகா ..

இந்த நிலையில் தான் இருவரும் சேர்ந்து பரஸ்பரமாக பிரிந்து விடலாம் என்ற முடிவை எடுத்தோம் என்று தனது விவாகரத்து குறித்து வாய் திறந்து உண்மையை கிருத்திகா அண்ணாமலை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சீரியல்களில் வில்லியாக நடிக்கக் கூடிய இவருக்கு எப்படி ஒரு நிலைமையா? உருவத்தை காரணமாக வைத்து தான் உங்களுடைய பிரிவு ஏற்பட்டதா? என்று பரிதாபகரமாக கேட்டிருக்கிறார்கள்.

இந்த காலத்தில் முட்டாள் தனமாக மனைவியை உருவ கேலி செய்து அதனால் பிரிந்து வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்த கிருத்திகாவின் கணவரை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று பூடகமாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் கிருத்திகா அண்ணாமலைக்கு பலரும் ஆதரவாக பேசி வருகிறார்கள்.

இது மேலும் அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இன்னும் சில சீரியல்களில் ஆக்கத்தோடு பணிபுரியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version