குழந்தை பிறந்து ரெண்டு மாசம் கூட ஆகல.. கணவரின் கொடுமை.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..!.

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் கிருத்திகா அண்ணாமலை. இவர் சீரியலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சீரியல் வில்லியாக தமிழ் மக்களின் மனதில் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக இவரை கிருத்திகா அண்ணாமலை என சொல்வதை விட மெட்டி ஒலி கிருத்திகா என்று சொன்னால் எல்லோருக்கும் டக்குனு ஞாபகத்திற்கு வந்துவிடுவார்.

ஒவ்வொரு சீரியலிலும் இவரது வில்லத்தனமான நடிப்பு மிரள வைக்கும். அந்த காலத்தில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

திமிரு அழகு நடிப்பு அசத்தல் நல்ல உயரம் என அனைத்து வித்தைகளையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கவனத்தை ஈர்த்தார்.

கிருத்திகா அண்ணாமலை:

ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றார். அதன் பின்னர் வில்லி ரோல் நமக்கு பக்காவாக பொருந்துகிறது.

என சட்டென புரிந்து கொண்டு தொடர்ந்து அதிரடி வில்லியாக ஒவ்வொரு சீரியலிலும் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

அந்த வகையில் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உன்னிடம் பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னதம்பி சீரியலிலும் நடித்து அதகளம் செய்து விட்டார் கிருத்திகா.

இவர் சீரியல்களில் வில்லியாக நடித்து வந்ததால் உண்மையிலேயே அவரது கேரக்டரும் அப்படித்தான் போல என்ற நிஜத்திலும் மக்கள் நம்பும் அளவுக்கு அவ்வளவு பக்காவாக நடித்த அசத்துவார்.

சீரியல் நடிகையாக மட்டுமின்றி கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாடும் நிகழ்ச்சியில் இவர் ஆடிய கவர்ச்சி ஆட்டம் அப்போதைய இளைஞர்களால் தற்போது வரை மறக்கவே முடியாது.

அந்த அளவுக்கு கிக் ஏத்துவார் நடனத்தில். அதன் பின்னர் பெரிதாக சீரியல்களில் அவர் தென்படுவதில்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒரு தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

3 வருஷம் கழித்து பெத்துக்கலாம்:

அதாவது நான் தொடர்ச்சியாக மூன்று சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தபோது எனக்கு திருமணம் ஆனது

அப்போது உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமே எனக் கூறி தள்ளிப்போட்டேன்.

ஆனால் அதனை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின்னர் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்து விட்டார்.

மகன் பிறந்த உடனே எனது கணவர் தொழில் ரீதியாக மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்து விட்டார்.

அந்த சமயத்தில் குழந்தை பெற்ற பிறகு என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. நான் ஓய்வில் இருந்தேன்.

பணத்திற்கு திண்டாட்டம்:

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே பணக்கஷ்டம் ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் மீண்டும் நான் சீரியல்களில் நடிக்க சென்றேன்.

காட்டின கணவர் வீட்டில் இருக்கும்போது நான் வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி மட்டும் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படவே கூடாது. அப்படி நடைபெற்றால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் தான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

ஆனால் அதையும் நான் தாங்கிக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வேலைக்கு சென்று வந்தேன். அதன் பின்னர் பிரச்சனை குடும்பத்தில் அதிகரிக்க துவங்கியது.

ஏற்கனவே எனது அம்மாவும் கணவரை இழந்து தனியாக வாழ்ந்ததால் எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை நான் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அதை மறைக்க முடியவில்லை. வெளிப்படையாக சொன்னபோது என் அம்மா என்னை பயங்கரமாக திட்டினார்.

பின் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் நான் தற்கொலைக்கு முயற்சித்து கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தேன்.

தற்கொலை முயர்ச்சி, விவாகரத்து:

அதன் பிறகும் தொடர்ந்து நான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழலாம் என முடிவெடுத்து நான்கு வருடம் கிட்டத்தட்ட அவருடன் வாழ்ந்து வந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்னால் அவரது டார்ச்சர் தாங்கவே முடியாமல் ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன்.

தற்போது எனது மகன் நான் என இருவரும் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறோம். கிடைக்கும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என அவர் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version