சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ்க்கு 18 வயசுல மகளா..? நம்பவே முடியல.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..!

பெரும்பாலும் சீரியல்களில் இருக்கும் நடிகைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வட இந்தியாவில் இருப்பவர்களாகவோ அல்லது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஏனெனில் தொடர்ந்து சீரியல்களில் இருந்துவரும் போட்டி காரணமாக மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையும் தமிழ் சின்னத்திரை நிறுவனங்கள் அவர்களது சீரியல்களில் நடிப்பதற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.

சின்னத்திரை பிரபலம்:

இப்படி பல நடிகைகள் வேறு மொழியில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சில நடிகைகளும் உண்டு. அப்படியான ஒரு சில நடிகைகளில் பிரியா பிரின்ஸ் முக்கியமானவர்.

தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே சின்னத்திரையில் பெரிதாக வலம் வரவேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு விஜய் டிவியில் இவருக்கு ஒரு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாகவே விஜய் டிவிக்கு வரும் நடிகைகளுக்கு மிக எளிதாகவே மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிடும். அதற்குப் பிறகு தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

படங்களில் வாய்ப்பு:

இந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையை எல்லாம் குறைத்து மிகவும் கஷ்டப்பட்டார் பிரியா பிரின்ஸ் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு கண்ணான கண்ணே, பொன்மகள் வந்தாள், மாப்பிள்ளை, கண்மணி என்று பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவர் ஆசைப்பட்டது போலவே அவருக்கு திரை துறையில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இயக்குனர் ஷங்கர் இயக்கி 2018 வெளியான 2.0 திரைப்படத்திலிருந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல பசங்க 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாக பிரியா பிரின்ஸ் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரின் பிறந்தநாளை மிகவும் பெரிதாக கேக் வெட்டி கொண்டாடினார்.

பிரியா பிரின்ஸ் சமீபத்தில் அந்த பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டார். பிரியா பிரின்ஸ் பார்ப்பதற்கு மிகவும் இளமையாகதான் இருப்பார் அவருக்கு 16 வயதில் ஒரு பெண் குஇருக்கும் என்பது பலரும் எதிர்பார்க்காத விஷயமாக இருந்தது. அதனால் அனைவரும் இதனை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version