ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சுடுறாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஏக்கம்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் ரச்சிதாவும் முக்கியமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கர்நாடகாவில் பிறந்தவர் நடிகை ரச்சிதா. முதலில் அவர் கர்நாடகாவில் உள்ள சின்னத்திரை தொடர்களில்தான் நடித்து வந்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியிலும் அவரது பெயர் அடிப்பட துவங்கியது.

சின்னத்திரையில் வரவேற்பு:

இந்த நிலையில்தான் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரின் வழியாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் ரச்சிதா. அந்த சீரியலுக்கு டி.ஆர்.பி அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

rachita

விஜய் டிவியை பொறுத்தவரை அதில் வரும் ஒரு பிரபலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கிவிட்டால் அவர்களை விஜய் டிவியே வளர்த்துவிட துவங்கிவிடும்.

இந்த நிலையில் அடுத்து அவருக்கு சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே சீரியல் நடிகர் தினேஷை காதலித்து வந்த ரச்சிதா அவரையே திருமணமும் செய்துக்கொண்டார்.

பிக்பாஸில் எண்ட்ரி:

சீரியலை விடவும் பிரபலங்களை அதிக பிரபலமாக்கும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஏனெனில் சீரியல் பார்க்காதவர்கள் கூட பிக்பாஸ் பார்ப்பது உண்டு. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறில் போட்டியாளராக கலந்துக்கொண்டார் ரச்சிதா.

அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு வந்த சீசனில் ரச்சிதாவின் கணவர் தினேஷும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கு தனது மனைவியிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

rachitha-mahalakshmi

பட வாய்ப்பு:

பிக்பாஸில் போட்டியாளராக இருந்துவிட்டு வந்த பிறகு ரச்சிதாவிற்கு படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து அவர் ஃபையர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவை இல்லாமல் இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறாராம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ரச்சிதா “ஆண்களை பொறுத்தவரை ஒரு இடத்துக்கு கிளம்புவது என்றால் ஐந்து நிமிடங்களில் கிளம்பி விடுவார்கள்.

ஆனால் பெண்கள் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் ஆகும். பொதுவாகவே எல்லா ஆண்களுமே சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் தங்கள் உடைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால்தான் தாமதமாகிறது” என கூறியிருந்தார் ரச்சிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version