சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!

முன்பெல்லாம் சீரியலில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஏனெனில் அப்பொழுதெல்லாம் இப்பொழுது இருப்பது போல சமூக வலைதளங்களின் வளர்ச்சியோ அல்லது இணையத்தின் வளர்ச்சியே இருக்கவில்லை.

ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக நடிகைகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர். முக்கியமாக சீரியல்களில் புடவை கட்டி நடித்துவரும் நடிகைகள் பலருமே மாடர்ன் லுக்குக்கு மாறி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவர்களது வரவேற்பை அதிகரிக்கின்றன.

அம்மா கதாபாத்திரம்:

இதனால் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் கூட இப்பொழுது மிக எளிதாக வரவேற்பை பெற்று விடுகின்றனர். அப்படியாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ராஜேஸ்வரி. சின்னத்திரையில் மிகப் பிரபலமான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

அந்த நடிப்பு ரீதியாக பார்க்கும் பொழுது அந்த அம்மா கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே இவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதனால் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்தார்.

அதே சமயம் சமூக வலைதளங்களில் பார்க்கும் பொழுது நாடகங்களில் வருவது போல புடவை கட்டிக்கொண்டு இவர் புகைப்படங்களை வெளியிடுவது கிடையாது. அதில் அதிகம் மாடர்ன் லுக்கில்தான் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நிஜமான மாடர்ன் லுக்:

அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவர்தான் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ராஜேஸ்வரியா என்கிற சந்தேகம் வரும். அந்த அளவிற்கு மொத்தமாக மாற்றமாக இருப்பார் ராஜேஸ்வரி. இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகின்றனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உண்மையிலேயே ராஜேஸ்வரிக்கு அம்மாவாக நடிக்கும் அளவிற்கு அதிக வயது கிடையாது என்று கூறப்படுகிறது. அவருக்கு குறைவான வயதுதான் ஆகிறதாம் ஆனால் நாடகத்திற்கு நடிக்க வரும் பொழுது எடுத்த உடனே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கதான் வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது.

சரி கிடைத்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று தனது வயதுக்கு தாண்டிய கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார் ராஜேஸ்வரி. அதனால் தான் அவரை சீரியலில் காட்டும் பொழுது அவர் இருக்கும் வயதை விடவும் இன்னும் அதிகமான வயதாக மாற்றி காட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவரது உண்மை புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் மாடர்ன் புகைப்படங்கள் பலவும் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version