நைட் வந்து இதை பண்ணு.. ரொம்ப தப்பா பேசினார்.. சன் டிவி சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் என்றால் அது நடிகை ராணி என்று கூறலாம்.

ஹீரோயினாக வருவதற்கு அனைத்து வழக்கும் திறமையும் இருந்த போதும் தனக்கு கிடைத்த வில்லி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மிரட்டியவர் நடிகை ராணி.

தன்னுடைய பயணத்தை தொடங்கியது முதல் தற்போது வரை சீரியல் என்றால் உச்ச நடிக்கையாக இருக்கிறார் நடிகை ராணி..

சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.

அதில் குறிப்பாக என் அம்மா நான் படித்துக் கொண்டிருக்கும் போது இறந்து விட்டார் என் வீட்டில் அக்கா தங்கை என இரண்டு பெண்கள் இருந்ததால் நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

நான் பட்டப்படிப்பை கூட முழுவதாக முடிக்கவில்லை. எனக்கு மகன் பிறந்த பிறகுதான் நான் சீரியலில் நடிக்கவே வந்தேன். கடவுளின் அருளால் நான் அறிமுகமானதிலிருந்து இப்போது வரை எனக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

என் அப்பா நான் சீரியலில் வளர்ந்து பெரிய உயரத்தை எட்டியதை பார்க்கவில்லை. நான் படித்ததை பார்க்கவில்லை, என் கல்யாணத்தை பார்க்கவில்லை, நான் நடித்ததை பார்க்கவில்லை, என் கணவர் குழந்தைகள் என எதையுமே என் அப்பா பார்க்கவில்லை. இது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சோகம் என பதிவு செய்திருந்தார்.

தொடர்ந்து பேசியவர் பகீர் குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தார். அதாவது நான் சீரியலில் நடிக்க ஆரம்பத்திலிருந்து ஒரே ஒரு சீரியலில் இருந்து மட்டும் தான் பாதியிலேயே விலகி இருக்கிறேன்.

எந்த சீரியலாக இருந்தாலும் அதனை முழுமையாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கொள்கை. ஆனால் ஒரே ஒரு சீரியலில் இருந்து மட்டும் பாதியில் என்னால் விலக நேர்ந்தது.

அதற்கு என்ன காரணம் என்றால் இரவு நேரத்தில் படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று ரொம்ப மோசமான தவறான நோக்கத்துடன் அழைத்தார்கள். எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.

இப்படித்தான் சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் அந்த சீரியல் வாய்ப்பு வேண்டாம் என அடுத்த நாளே அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ராணி பாதியிலேயே விலகிகிய சீரியல் என்ன..? என்று இணையத்தில் தேட தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version