படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்பா எதையும் பாக்கல.. சீரியல் நடிகை கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் எப்படி நடிகர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சின்னத்திரையிலும் பிரபலமான நடிகைகள் உண்டு. அவர்களுக்கென்று தனி ரசிகர்களும் உண்டு. சில நடிகைகள் சின்னத்திரையில் சீரியல் என்கிற விஷயம் ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்து வருவதுண்டு.

அப்படியாக தமிழ் சின்னத்திரையில் வெகு காலங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராணி. இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தபோதும் கூட தொடர்ந்து வில்லியாக நடிப்பதையே தேர்ந்தெடுத்தார்.

பிரபலமான நடிகை:

இதனாலையே தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் வில்லி நடிகைகளில் முக்கியமானவராக ராணி இருந்து வருகிறார். இப்போது வரை அவருக்கு சின்னத்திரையில் இருக்கும் வாய்ப்புகள் என்பது குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவர் அதில் வில்லியாக நடித்து வருகிறார். சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, குலதெய்வம், ரோஜா என்று பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

சன் டிவியில் அதிக நாட்கள் ஓடிய சந்திரலேகா சீரியலின் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அந்த சீரியல். இது இல்லாமல் நிறைய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

வாழ்க்கை நிகழ்வு:

இந்த நிலையில் ஒரு யுடியூப் சேனலில் பேட்டி அளித்த ராணி அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனது அப்பா நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இறந்து விட்டார் எனது வீட்டில் அக்கா தங்கை என பெண்கள் இருந்ததால் நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு திருமணம் நடந்து விட்டது.

நான் டிகிரி கூட முடிக்க முடியவில்லை. இறுதியில் கடைசி கல்லூரி தேர்வையும் என்னால் எழுத முடியாமல் போனது. அதன் பிறகு எனக்கு ஒரு மகன் பிறந்தான். அதற்கு பிறகுதான் நான் சீரியலுக்கு நடிக்க வந்தேன் கடவுள் அருளால் சீரியலுக்கு வந்தது முதல் இப்போது வரை எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

வாழ்க்கையில் நான் பெரிய உயரத்தை தொட்டதை எனது அப்பா பார்க்கவில்லை. நான் படித்ததை பார்க்கவில்லை, என் கல்யாணத்தையும் பார்க்கவில்லை, என் கணவர் குழந்தைகள் என எதையுமே அவர் பார்க்கவில்லை. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் என்றுதான் கூற வேண்டும்.

வாழ்க்கையில் அப்பா என்பது முக்கியமான ஒன்று எந்த அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு தான் நான் ஆசைப்படுவேன் என்று கூறுகிறார் ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version