சீரியல் நடிகை ரிஹானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 3 மாரி என்ற ரோலில் நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் இது குறித்த விஷயங்கள் இணையங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விடுகிறது.
சீரியல் நடிகை ரிஹானா..
அந்த வகையில் நடிகை ரிஹானா இந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் தற்போது நடித்த வருகிறார்.
சமீப காலமாக இவர் அளித்து வரும் பேட்டிகளில் தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் முதல் திருமணம் எதனால் விவாகரத்தில் முடிந்தது என்பது போன்ற விஷயங்களையும் மனம் விட்டு பிரிந்தார்.
17 வயசுல.. 60 வயசு நபர் என்னை..
மேலும் இவர் 17 வயதாக இருக்கும் போது ஹோம் நர்ஸ் வேலைக்கு சென்ற விவரத்தை தெரிவித்ததோடு அந்த வீட்டில் வேலைக்கு சென்ற போது அங்கிருந்த 60 வயது முதியவர் தன்னிடம் எதற்காக வேலைக்கு வருகிறாய் என்று கேட்டதாக சொன்னார்.
இதனை அடுத்து திருமணத்திற்காக நகை வாங்க சீட்டு போட்டு இருக்கிறேன். அதற்காகத்தான் வேலைக்கு வருகிறேன் என்ற உண்மையை நான் சொல்ல அந்த முதியவர் அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா? என்ற பீடிகையை போட்டார்.
சீரியல் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..
மேலும் அவர் பேசும் போது அந்த முதியவர் நீ எதற்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம் நீ என்னை அட்ஜஸ்ட் பண்ணி நடந்து கொண்டாலே திருமணத்திற்கு அனைத்து செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
60 வயதான கிழவர் தன்னிடம் இது போன்று பேசியதை கேட்டு அறிந்து போன நடிகை அப்போது எனக்கு வெறும் 17 வயது தான் இருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அவரிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறைக்குள் சென்று பூட்டி கொண்டேன்.
இதை அடுத்து அலுவலகத்தில் தகவல் கொடுத்து அந்த வீட்டில் வேலை செய்ய மாட்டேன் எனக் கூறி வேறு வீட்டுக்கு வேலைக்கு சென்றேன். இது போல மோசமான மனிதர்கள் இந்த சமுதாயத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மேலும் பெண்ணாக பிறந்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளை இந்த சமுதாயத்தில் சமாளிக்க கூடிய சூழ்நிலையில் தான் எல்லா பெண்களும் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை பக்குவமாக பேசி பலரது அனுதாபத்தையும் பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
மேலும் வருங்காலத்திலாவது ஒவ்வொரு பெண்ணின் மனநிலையை அறிந்து அந்த பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்றும் சபல புத்தியோடு எந்த பெண்களையும் ஏறெடுத்து பார்க்கக் கூடாது என்பது போன்ற கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.