ஊசி போடுறேன்னு பின்னாடி திரும்ப சொல்லி செஞ்சாரு.. நடிகர் முதல் மருத்துவர் வரை.. சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்..!

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரிஹானா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

தற்சமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிஹானா அதிக பிரபலம் அடைந்து வருவதோடு துணிச்சலாக பேசும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார்.

ஊசி போடுறேன்னு பின்னாடி

ஆரம்ப காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை அவருக்கு பாலியல் ரீதியாக இருந்த துன்புறுத்தல்கள் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மட்டும் இருப்பது கிடையாது.

எல்லா இடங்களிலுமே இருக்கிறது. பெரும்பாலும் அட்ஜஸ்ட்மெண்டில் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிகமாக ரிஸ்க் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய ஆண்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்கிறார்கள்.

நடிகர் முதல் மருத்துவர் வரை

அதற்குப் பிறகு அதனால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் ஆனால் ஆண்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் துடைத்து போட்டுவிட்டு எளிதாக போய்விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவர்களுக்கு கர்ப்பமானால் மிக பெரும் பிரச்சனைகள் ஏற்படும்.

ஆனால் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் நடிகைகள் வாழ வேண்டியிருக்கிறது. சினிமா துறை மட்டும்தான் இப்படியா என்றால் அப்படி கிடையாது. இதற்கு முன்பு நான் நர்சாக பணிபுரிந்து வந்தேன் அப்பொழுது ஒரு 60 வயது கிழவர் தவறாக நடந்து கொள்ள என்னிடம் முயன்றார்.

சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்

அதே போல மருத்துவமனையில் என்னுடன் பணி புரிந்த மருத்துவர் எனக்கு ஊசி போட கற்றுத் தருகிறேன் என்று கூறி எங்கு ஊசி போட வேண்டும் என்று சொல்வதற்காக பாயிண்ட் காட்ட வேண்டும் என என்னை பின்னாடி திருப்பி தடவினார்.

சினிமாவிற்கு வந்த பிறகும் அப்படித்தான், ஒரு படத்தில் நான் நடித்த பொழுது அந்த படத்தில் எனது படப்பிடிப்பு எனது நடிப்பு சூப்பராக இருக்கிறது என்று கூறி சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவர் என்னிடம் வந்து எனது நம்பரை கேட்டார்.

சரி வாய்ப்பு தருவதற்காக தான் கேட்கிறார் என்று நானும் நம்பி நம்பரை கொடுத்தேன் ஆனால் அடுத்த நிமிடமே எனக்கு தவறான மெசேஜ்களை அவர் அனுப்பினார் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அந்த பெரிய நடிகர் யாராக இருக்கும் என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version