மயங்கி கிடக்கும் போது.. அந்த உறுப்பில் கை வைத்து என்ஜாய் பண்ணான்.. டான்சர் குறித்து வம்சம் சந்தியா..

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜகர்லமுடி செல்லமடி நீ எனக்கு என்று சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்புக்கு மேலும் பல சீரியல் வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து இவருக்கு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியல் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

வம்சம் சந்தியா..

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் அளித்துள்ள பல விஷயங்கள் மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் டைட்டில் படமாக்கப்பட்டுள்ள போது அங்குள்ள கோயில் யானையுடன் படப்பிடிப்பு நடந்த போது ஏற்பட்ட சம்பவத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

இந்த படப்பிடிப்பு சமயத்தில் யானை திடீரென்று தும்பிக்கையால் தாக்கி தன்னை கீழே தள்ளியதை அடுத்து சுய நினைவை இழந்ததாகக் கூறியிருக்கும் இவர் அந்த சமயத்தில் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி கதறி அழுது பகிர்ந்திருக்கிறார்.

இந்த சமயத்தில் கூட இப்படி ஆண்கள் நடந்து கொள்வார்களா? என்று கேட்கக்கூடிய வகையில் இவர் பிணம் போல் கிடந்த நிலையில் ஒரு டான்ஸ் செய்த செயலை சொல்லி கதறி அழுத சந்தியாவின் பேச்சானது தற்போது பரவலாக பரவி வருகிறது

மயங்கி கிடந்த போது என்ஜாய்..

யானையால் தாக்கப்பட்டு மயங்கி கிடந்த போது நான் சாவை பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன். நான் பிழைப்பேன் என்று நினைக்கவே இல்லை. நான் எந்த அசைவும் இல்லாமல் அந்த சமயம் ஒரு பிணம் போல் கிடந்தேன்.

இதையும் படியுங்க: சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் கிளாமர் குயினு.. ரெட் ஹாட் உடையில் வைஷ்ணவி அருள்மொழி..!

அப்போது அங்கிருந்த டான்ஸர்கள் தான் என்னை காப்பாற்ற மருத்துவமனை தூக்கிச் சென்றார்கள். அந்த நேரத்தில் ஒரு டான்ஸர் என் மார்பை பிடித்து அழுத்தினார். அந்த டான்சர் யார் என்று கூட என்னால் தற்போது கூற முடியாது. ஏனென்றால் நான் மயக்கத்தில் இருந்த போது இந்த நிகழ்வு நடந்தது. எனினும் நான் அதை உணர்ந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

டான்சர் குறித்த பகிர் தகவல்..

இது வரை அந்த டான்ஸர் செய்த செயலைத் தான் என் வாழ்க்கையில் மோசமான அனுபவமாக கருதுகிறேன். இது வரை எந்த இன்டர்வியூவிலும் இது பற்றி நான் சொன்னது கிடையாது. இவ்வளவு ஏன் என் அம்மாவிடம் கூட இந்த விஷயத்தை நான் பகிர்ந்து கொண்டது கிடையாது.

பெண்கள் விஷயத்தில் இன்னும் இவரை போல பல ஆண்கள் படு மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வை நான் உதாரணமாக கூற விரும்புகிறேன். எனக்கு விபத்தில் ஏற்பட்டதை அடுத்து ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில உறுப்புகளும் அகற்றப்பட்டது.

இதையும் படியுங்க: மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சக நடிகை வனஜா..!

சிறிது காலம் கழித்து மாதவிடாய் சமயத்தில் என்னை யானை மிதித்து விட்டதாக பல விஷயங்கள் கசிந்தது. நான் மாதவிடாயாக இருந்தேன் என்பது எப்படி தெரியும். நான் சொன்னால் தானே எது உண்மை எது பொய் என்று தெரியும் என்று சந்தியா கூறி இருப்பது பலரையும் இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவரது மன அழுத்தத்தை நீக்க கூடிய வகையில் ஊக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version