அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டாரு.. என் அண்ணன் தான் எல்லாமே.. ஆனால்.. சாண்ட்ரா கண்ணீர்..!

தொகுப்பாளராகவும் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர் தான் சாண்ட்ரா .

இவர் கஸ்தூரி மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இன்றும் மக்கள் மத்தியில் நினைவிருக்கும் நடிகையாக சாண்ட்ரா இருந்து வருகிறார் .

சீரியல் நடிகை சாண்ட்ரா:

இவர் தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகை ரேஞ்சிக்கு மவுசும் மார்க்கெட்டும் பிடித்துவிடுகிறார்கள்.

இவர்களை ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் பார்த்து ரசிப்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

குறிப்பாக இளசுகள் முதல் சிறியவர்கள் வரை தொலைக்காட்சி தொடர்களை பார்த்து வருவதால் சீரியல் நடிகைகள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி விடுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சீரியல் நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் மிகச்சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள் .

பிரஜன் – சாண்ட்ரா காதல்:

அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் சாண்ட்ரா பிரஜன். சீரியல்களில் ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் லைஃப் ஜோடியாக தங்களது சிறப்பான வாழ்க்கை வாழ துவங்கியிருக்கிறார்கள்.

சீரியல்களில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கு முன்னதாகவே சாண்ட்ரா வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்து அதன் பிறகுதான் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த இடத்தை பிடிக்க அவர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக மிகவும் சிரமப்பட்டு தான் இந்த அளவுக்கு வெற்றியை பிடித்ததாக பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் நான் பிரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகுதான் என்னுடைய வாழ்க்கை மிகவும் அமைதியாகவும்ம் சாந்தமாகவும் இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவர் பிரஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் மிகவும் பிரபலமாக இருந்தார்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தனர்.

10 வருடங்களுக்கு பிறகு குழந்தை:

காரணம் தங்கள் பொருளாதார ரீதியாகவும் சின்னத்திரையில் நல்ல நல்ல சீரியல்களில் நடித்து நல்ல வாழ்க்கையை துவங்கும் வரைக்கும் குழந்தை வேண்டாம் என இவர்கள் தள்ளி போட்டு வந்தனர்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். தற்போது குழந்தை குடும்பம் என மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சாண்டரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வாழ்க்கையில் அனுபவித்த மிக கொடுமையான விஷயங்களை குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது நாங்கள் சிறு வயதாக இருக்கும்போதே என்னுடைய அப்பாவும் என்னுடைய அம்மாவும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அந்த சமயத்தில் நானும் என்னுடைய அண்ணனும் என்னுடைய அப்பாவுடன் சென்று விட்டோம். என்னுடைய அப்பா சில நாட்கள் வரை நன்றாக பார்த்துக்கொண்டார் .

மறுமணம் செய்துக்கொண்ட அப்பா:

பின்னர் நான் வேறொரு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எங்களிடம் கூறினார். அதற்கு என்னுடைய அண்ணன் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார்.

ஆனால், எனக்கு அதற்கு சம்மதிக்க விருப்பமே இல்லை. ஆனாலும், என்னுடைய அப்பா பின்னொரு காலத்தில் உங்களால் தான் என்னுடைய வாழ்க்கையை வீணாகி விட்டது என கூறுவாரோ என்று பயந்து நாங்கள் அப்பாவின் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தோம்.

பிறகு என்னுடைய அப்பா திருமணம் செய்து கொண்டு வந்த சித்தியால் நாங்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்தோம்.

வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு அவரால் கஷ்டங்களை அனுபவித்தோம். ஆனாலும் என்னுடைய அண்ணன் எனக்கு உறுதுணையாக எப்போதும் இருப்பார் என்று நம்பிக்கையோடு நான் வாழ்க்கையை கடந்து வந்தேன்.

அண்ணன் மரணம்:

திடீரென ஒரு சமயத்தில் என்னுடைய அண்ணன் விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டார். என்னுடைய அண்ணன் இறந்த மறுநாளே அவருடைய காதலி தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.

என்னுடைய அண்ணனுக்கு காதல் ஒன்று இருந்தது என்பதே எங்களுக்கு தெரியவே தெரியாது. அவர் இறந்த பிறகு தான் அவரது காதல் தான் எங்களுக்கு தெரிய வந்தது.

இதிலிருந்து மீண்டு வர நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீரியலில் நடித்து என்னை பொருளாதார ரீதியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டேன்.

அப்படி ஒரு சமயத்தில் தான் நான் பிரஜனை சந்தித்தேன். எனக்கு பொதுவாக நன்றாக நடிக்கும் நடிகர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் .

பிரஜன் மிகச்சிறந்த நடிகர் என்பதே எனக்கு பிடித்திருந்தது. பிறகு அவருக்கு பேசி பழக ஆரம்பித்தேன். பின்னாலில் அவரது குணங்கள் என்னை மிகவும் கவர்ந்தது .

இதன்பின் இருவரும் காதலிக்க துவங்கினோம் திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நாங்கள் இருவருமே பொருளாதார ரீதியாகவும் சீரியல்களில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்து கொண்டிருந்தோம்.

இரட்டை குழந்தை வளர்க்க பட்ட கஷ்டம்:

அந்த சமயத்தில் குழந்தை எல்லாம் வேண்டாம் என முடிவு எடுத்திருந்தோம். பின்னர் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள் .

குழந்தை பிறந்த பிறகு எங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள இரு வீட்டிலுமே பெரிதாக சப்போர்ட் இல்லை. இதனால் நாங்கள் இருவருமே குழந்தைகளை பார்த்துக் கொண்டு வேலைக்கு சென்று. குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

சில நேரங்களில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம். அப்போதெல்லாம் பிரஜன் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பார்.

இரண்டு குழந்தைகள் வளர்ப்பது என்று எளிதான காரியமே கிடையாது. இரவு முழுக்க தூங்காமல் மாற்றி மாற்றி பால் கொடுத்து தூங்க வைக்க வேண்டும்.

இதற்கு சூட்டிங் போய் வேலை செய்ய வேண்டும். ஆனால், நான் ஒருபோதும் குழந்தைகளால் படும் கஷ்டத்தை பிரஜனிடம் சொல்லி கஷ்டப்பட்டதே கிடையாது.

அவரை கஷ்டப்படுத்தக் கூடாது என நினைத்து நான் கடினமாக குழந்தைகளை வளர்த்து வந்தேன். பிரஜன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு சினிமா கை கொடுக்கவில்லை ஆனால் சின்னத்திரை அவருக்கு கை கொடுத்து வெற்றி கொடுத்திருக்கிறது என சாண்ட்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version