அன்பே வா சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த நடிகரா..? பார்ரா..!

சமீப நாட்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பல பேர் காதலித்து உண்மையிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் .

அப்படி இல்லை என்றாலும் சீரியல் நடிகைகள் மற்ற சீரியல் நடிகரின் அழகில் மயங்கி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ரீல் ஜோடியாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டு வரும் அவர்கள் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறி வருவதால் ரசிகர்களும் அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் மனமார கூறி வருகிறார்கள்.

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா நீல்நாத்:

அந்த வகையில் தற்போது. பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீ கோபிகா நீல்நாத் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான வைசாக் ரவி என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக பெரும் புகழ் பெற்ற நடிகராக இருந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீ கோபிகா நீல்நாத்.

 

தற்போதைய தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி தொடராகவும் டிஆர்பி உச்சத்தை தொட்டிருப்பதாகவும் பார்க்கப்பட்டு வரும் சுந்தரி சீரியலில் அனுப்ரியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரும் மனதையும் ஈர்த்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் 1997 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீ கோபிகா நீல்நாத் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் படித்து முடித்து அதன் பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார் .

தொலைக்காட்சி தொடரில் வாய்ப்பு:

இதன் மூலம் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த தொடங்கியது. மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உயிரே போன்ற சீரியல்களில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்தத் தொடரில் “பவித்ரா செழியன்” என்ற ஒரு கேரக்டரில் நடித்ததன் மூலமாக மக்கள் மனதில் மிகுந்த அழுத்தமான இடத்தை பிடித்தார் நடிகை ஸ்ரீ கோபிகா.

அத்துடன் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியதை அடுத்து ஓவியா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய 90ml திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் நான்சென்ஸ் போன்ற சில தமிழ் படங்களிலும் இவர் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்தார்.

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்:

தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த ஸ்ரீ கோபிகா தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்றை புகைப்படங்களுடன் அறிவித்து எல்லோருது வாழ்த்து மழையிலும் நனைந்து வருகிறார்.

ஆம், தன்னுடைய நீண்ட நாள் நண்பரான “வைசாக் ரவி” என்பவருடன் தற்போது திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்ரீ கோபிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கண்களை பறிக்கும் சிகப்பு நிறத்தில் பாரம்பரிய சேலை அணிந்து லட்சணமான அழகுடன் ஸ்ரீ கோபிகா தனது வருங்கால கணவர் வைசாக் ரவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக்கான புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் வைசாக் ரவி சிகப்பு நிற குர்தாவில் ஸ்ரீ கோபிகாவுக்கு மேட்சிங் ஆக வந்து அசத்தினார். இந்த ஜோடி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam