இதுனாலதான் என் கல்யாணம் நின்னு போனுச்சு!. சீக்ரெட்டை ஓப்பன் செய்த சுந்தரி நடிகை!.

சினிமாவை பொறுத்த வரை என்னதான்  சினிமா நடிகைகள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஆட்களாக இருந்தாலும் கூட அவர்களை விட அதிக பிரபலமாக இருந்து வருபவர்கள் சீரியல் நடிகைகள்தான். அதற்கு முக்கிய காரணம் தினந்தோறும் சீரியல்களில் நடிகைகளை மக்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால் சினிமா நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வரும்போது மட்டும்தான் அவர்களை பார்ப்பார்கள். மற்றபடி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களை பார்ப்பதோடு சரி.

சுந்தரி நடிகை

இப்படி எளிதாக சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ கோபிகா. ஸ்ரீ கோபிகாவை பொருத்தவரை சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டுமே இவரும் நடித்திருக்கிறார். இரண்டிலுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

இவரை சுந்தரி சீரியல் மூலமாக பலருக்கும் தெரியும். சுந்தரி சீரியலில் சுந்தரியை வளர்த்து விடும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு இவர்தான் சுந்தரி கலெக்டர் ஆவதற்கு உதவும் ஒரு கதாபாத்திரமாக இருப்பார்.

என் கல்யாணம் நின்னு போனுச்சு

ஆனால் சுந்தரி கலெக்டர் ஆவதற்கு முன்பே இந்த கதாபாத்திரம் காணாமல் போய்விடும். இவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் திரும்பவும் சீரியலுக்குள் இவர் வருவார் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்சமயம் இவருக்கு சன் டிவியில் எந்த சீரியலிலும் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் பிறகு தொடர்ந்து அன்பே வா சீரியலில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். அதில் ஒரு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனேகமாக சுந்தரி சீரியலில் மீண்டும் இவருக்கு நடிப்பதற்கான நேரம் வரும்போது அன்பே வா சீரியலில் இருந்து பிரிந்து மீண்டும் சுந்தரி சீரியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வைசாக் ரவி என்பவரை எட்டு வருடங்களாக காதலித்து வந்தார்.

சீக்ரெட்டை ஓப்பன் செய்த நடிகை

8 வருடங்கள் இருவர் காதலித்து வருவது என்பது மிகப்பெரிய விஷயமாகும் அப்படி என்றால் இவர்கள் கல்லூரி காலத்திலிருந்து காதலித்து இருக்க வேண்டும். அந்த அளவிற்கு நெருங்கிய காதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க போவதாக வெளிப்படையாகவே கூறி இருந்தார்  ஸ்ரீ கோபிகா. இந்த நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் எல்லோருக்கும் வணக்கம் இந்த பதிவின் மூலமாக ஒரு முக்கிய விஷயத்தை கூற நினைக்கிறேன். என்னுடைய நிச்சயதார்த்தத்தை நான் ரத்து செய்து விட்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை ஸ்ரீ கோபிகா.

மேலும் அவர் இந்த நேரத்தில் உங்களுடைய ஆதரவும் புரிதலும் எனக்கு தேவை நாங்கள் திட்டமிட்டபடி எங்களுடைய திருமணம் நடக்கவில்லை எனவே நாங்கள் இருவருமே இதனை கடந்து சென்றுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளோம் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்ரீ கோபிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version