உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை ஸ்ரீதேவி அஷோக்..! வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆன ஸ்ரீதேவி அசோக் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

2007 ஆம் ஆண்டில் வெளிவந்த செல்லம்பட்டி நீ எனக்கு சீரியலில் நடிக்க ஆரமித்த இவர் அதை எடுத்து கஸ்தூரி, இளவரசி ,பிரிவோம் சந்திப்போம் ,வாணி ராணி ,சித்திரம் பேசுதடி ,கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை ஸ்ரீதேவி:

மேலும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருகிறார் .

இதற்கிடையில் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் 2010 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடனப் போட்டியாளராக பங்கேற்று தனது நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் ஸ்ரீதேவி அசோக்.

இவர் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு. தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவியின் காதல் திருமணம்:

திருமணம் குழந்தை பிறப்புக்குப் பிறகும் ஸ்ரீதேவி தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தொடர்ச்சியாக நடித்து வரும் ஸ்ரீதேவி தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

இத்திரைப்படம் தான் இவரது முதல். திரையுலக பயணமாக தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மோதலும் காதலும்” என்கிற நாடகத்தில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் .

உடலை குறைத்து ஒல்லியான ஸ்ரீதேவி:

இதனுடைய அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது குழந்தை மற்றும் குடும்பம் கணவர் என எடுத்துக் கொள்ளும் அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.

இந்த நிலையில் தற்போது குழந்தை பிறப்புக்கு பிறகு படு குண்டாக இருந்த உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அட இது நம்ம சீரியல் நடிகை ஸ்ரீதேவியா? இது என ரசிகர்களை வியந்து போய் விட்டார்கள். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக் குவிந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version