முதல் கணவர் கேட்ட அந்த வார்த்தை.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. நடிகை ஸ்ரித்திகா பரபரப்பு பேச்சு..!

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் ஜோடிகளாக நடிக்கும் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் .

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ஜோடியாக புகைப்படங்களை பதிவிடுவது என ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகச்சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருவார்கள்.

நட்சத்திர ஜோடிகளின் வாழ்க்கை:

ஆனால் மிக குறுகிய காலத்திலேயே இவர்கள் வாழ்க்கை அப்படி டோட்டல் ஆக மாறிவிடும் திடீரென விவாகரத்தை அறிவித்து இருவரும் தனித்தனியை பிரிந்து விடுவார்கள் .

இவர்களையா நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டிருந்தோம் என பலர் விமர்சித்து தள்ளுவார்கள்.

அந்த வகையில் தான் நாதஸ்வரம் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிகா.

மலேசியாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு சீரியலில் நடிக்க வந்து இங்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்து விட்டார் ஸ்ரீதிகா.

அழகான ஹோம்லி லுக்கில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன்?

இந்த நிலையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகை ஸ்ரீதிகா தன்னுடன் மதராசி சீரியலில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இது ஆரியனுக்கும் இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இரண்டாம் திருமணம் செய்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீதிகா விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.

என்னுடைய முன்னாள் கணவர் மிகவும் நல்ல மனிதர் தான் அவரைப் பற்றிய எந்த குறையும் சொல்ல முடியாது.

ஆனால், எனக்கும் அவருக்கும் சில மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தது.

இது போக போக சரியாக விடும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பிரச்சனை மேலும் பெரிதாகியது .

விவாகரத்து ஆனது இதற்காக தான்:

ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து இந்த வாழ்க்கை செட் ஆகாது என்று பரஸ்பர மனதுடன் பிரிந்து விட்டோம்.

எங்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடவில்லை. 30 வயதில் மெச்சூர் ஆன பிறகு தான் எங்களுடைய பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் இது .

இருந்தாலும் இந்த திருமண வாழ்க்கை எனக்கு பிடித்தது போல் இல்லாததால் நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்.

கருத்து வேறுபாடு சண்டையாக மாறியதை தொடர்ந்து நாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம். எனவே என்னுடைய விவாகரத்துக்கு மிக முக்கிய காரணம் எது என்று கேட்டீர்கள்…

“யாராக இருந்தாலும் அவர்களுடைய இயற்கையான குணத்தின் படியே இருக்க வேண்டும். நமக்காக அவர்களை மாற்ற வேண்டும் என முயற்சிக்க கூடாது. அதனாலயே நான் அவரை விட்டு விலக முயற்சித்தேன்.

இரண்டாம் கணவருக்கு அதே பிரச்சனை:

இதுதான் எங்களது விவாகரத்துக்கும் காரணம். இதே போல் பிரச்சனை தான் ஆர்யனும் சந்தித்து வந்தார். அதனால் அவருக்கு ஒரு தோழியாக நான் உதவி செய்து மீண்டும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சித்தேன்.

ஆனால், அது நடக்கவில்லை நாங்கள் இருவரும் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தோம். ஆரம்ப கட்டத்தில் நட்பாக தான் பழகி இருந்தோம்.

ஆனால், எங்களை எல்லோரும் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என கேள்வி கேட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் எங்களுடைய மனதில் எதுவுமில்லை. என்னுடைய பெற்றோர்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? என்று கேட்டார்கள்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக யோசித்து தான் நாங்கள் இந்த திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கிறோம் என கணவர் ஆரியனுடனே அந்த பேட்டியில் கூறி இருந்தார் ஸ்ரீதிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version