தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியல் என்ற ஒன்று துவங்கியது முதலே இருந்து வரும் ஒரு நடிகை என்றால் அவர் நடிகை சுஜிதாதான் அவர்தான் தூர்தர்ஷன் சேனலில் நடிகையாக அறிமுகம் ஆகி இப்போது வரை தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் செல்வாக்கு மிக்க நடிகையாக இருந்து வருகிறார்.
சுஜிதா 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் ஸ்வேதா. அதற்குப் பிறகு ராஜ் டிவியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
சீரியலில் அறிமுகம்:
இந்த சீரியல் அப்பொழுதே வெகுவாக வரவேற்பை பெற்று இருந்தது ஆரம்பத்தில் தூர்தர்ஷன் சேனல் மட்டும்தான் நாடகங்களை ஒளிபரப்பி கொண்டிருந்தது. அதற்குப் பிறகு நிறைய தனியார் நிறுவனங்கள் டிவி தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பித்து சீரியல்களை வெளியிட துவங்கின.
அதனால் அப்பொழுது சீரியலில் நடித்து வந்த நடிகைகளுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் அடுத்து சுஜிதாவிற்கு விஜய் டிவியில் உறவுகள் என்கிற சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
மலையாளத்திலும் சூர்யா டிவி, ஏசியன் நெட் போன்ற டிவி சேனல்களில் நடித்து வந்தார் சுஜிதா. சன் டிவியில் முதன் முதலில் கணவருக்காக என்கிற சீரியலில் 2005 ஆம் ஆண்டு நடித்தார் சுஜிதா. பிறகு கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பிறகு கலைஞர் டிவியில் மைதிலி என்கிற சீரியலில் நடித்தார்.
இப்போதும் பிரபலம்:
தொடர்ந்து 1998 இல் துவங்கி இப்பொழுது வரை சீரியல்களில் நடித்து வருகிறார் சுஜிதா. தற்சமயம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்ததன் மூலம் அதிகமாக பிரபலமாகி வந்தார் ஸ்ரீ சீதா.
இது மட்டுமன்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலமாக இன்னமும் அதிகமாக அறியப்படும் நடிகையாக மாறி இருக்கிறார் சுஜிதா.
தொடர்ந்து சின்ன திரையில் வாய்ப்புகளை பெற்று வரும் சந்தித்த அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இது குறித்து ரசிகர்கள் கூறும் பொழுது இப்பொழுதும் இவ்வளவு இளமையாக இருக்கும் சுஜிதாவை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்காதது தமிழ் சினிமா செய்த தவறு. ஒரு நல்ல நடிகையை தமிழ் சினிமா இழந்து இருக்கிறது என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சுஜிதாவிற்கு எப்போதுமே தமிழ் சினிமாவின் மீது ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை