மூத்த பையனை நடுவுல வச்சித்தான் எங்க கல்யாணமே நடந்துச்சு.. கேவலமா பேசுனாங்க.. இப்படித்தான் சமாளிச்சோம்..!

அண்ணாமலை சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதா பாரதி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என்று நம்புகிறோம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஆனது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்தது.

இந்த சீரியலில் நடித்த நடிகை ஸ்வேதா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது பல்வேறு வகையான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்படி அவர் என்ன சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார் என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மூத்த பையனை நடுவுல வச்சித்தான் எங்க கல்யாணமே நடந்துச்சு..

இவர்களது காதல் திருமணம் பற்றி கூறும் போது திரைப்படங்களில் நடிக்க ஆடிசனுக்கு சென்ற போது தான் இவரது கணவர் இவரை சந்தித்ததாக கூறினார்.

மேலும் சீரியல் ஷூட்டிங் போது தமிழ் பாரதி தன்னை வைத்து ஷூட் செய்த சீனில் உண்மையாகவே காலில் அடிபட்டதை அடுத்து அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை கூடி அளிக்காமல் நான் துன்பப்பட்டு அழுததை அப்படியே காட்சியாக படம் பிடித்த சமயத்தில் தான் ஸ்வேதா மீது எனக்குள் காதல் இருந்திருக்கலாம் என்று சொன்னார்.

மேலும் அந்த சீரியலில் அஞ்சு பணியாற்றிய போது அஞ்சுவும் ஸ்வேதாவும் மிகச்சிறந்த தோழிகளாக இருந்தத காரணத்தால் ஸ்வேதா அஞ்சுமிடம் தனது வருங்கால கணவர் ஆன தமிழ் பாரதியை பிடித்திருக்கிறது என்ற விஷயத்தையும் அவர் எப்படிப்பட்டவர் என்ற ரீதியிலும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் பாரதியும் தன்னுடைய காதலை ஸ்வேதாவிடம் வெளிப்படுத்துவதற்காக ஒரு காட்சியை அதற்காக வடிவமைத்து அதை ஷூட் செய்யவும் திட்டமிட்டு விட்டார்.

அந்த சமயத்தில் தனது அந்த காட்சியில் இவர் ப்ரபோஸ் செய்வது போல ஸ்வேதாவிடம் பேசினால் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பார்த்து விட்டு தனது காதலை தெரிவிப்போம் என்று கருதி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் நினைத்தது நடந்தது ஸ்வேதா அவரது காதலுக்கு பச்சைக்கொடி அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வந்து பேசவும் சொல்லிவிட்டார்.

கேவலமா பேசுனாங்க..

இதை அடுத்து பெண் கேட்க சென்ற போது அவரது மாமியார் என்ன சாதித்து விட்டீர்கள் என்று பெண் கேட்டு வந்திருக்கிறீர்கள் என்று பேசினாங்க. மேலும் பெண் மீது ஒரு கோடி ரூபாய் போட வேண்டும் என்பது போல் பேசியதோடு சினிமாக்காரர்கள் திருமணம் பின் விவாகரத்து என உடனடியாக அனைத்தையும் செய்து விடுவார்கள் என்று நம்பிக்கை இல்லாமல் பேசினார்.

இதனை அடுத்து என்னுடைய நிலையைப் பற்றி எடுத்து சொன்னதோடு மட்டுமல்லாமல் ஸ்வேதாவிடம் உனக்கு நான் வேண்டுமென்றால் என்னோடு வா இல்லை என்றால் உங்க அம்மாவையே கட்டிக்கிட்டு அழு என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த சூழ்நிலையில் வெறும் வார்த்தையாக சொன்ன அந்த வார்த்தைகளை நம்பி ஸ்வேதா வந்துவிட்டார். வந்ததோடு மட்டுமல்லாமல் இனி மேல் தாங்காது என் அம்மா ஒவ்வொரு விதமாக என்னை பேசி புண்படுத்துகிறார்.

இனி என் வீட்டுக்கு செல்ல மாட்டேன் இதுதான் என் வீடு என்று சொல்ல திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு வீட்டை பார்த்து அங்கு குடியேறினோம்.

அந்த வீட்டில் கூட எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தான் சொன்னேன் ஒழிய உண்மையில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

 

இதை அடுத்து என் வாழ்க்கை மாறியது கிட்டத்தட்ட நான்காண்டுகள் அப்படியே கழிந்ததை அடுத்து எனக்கு ஒரு மகனும் பிறந்தான். இதை அடுத்துத்தான் என் வீட்டிற்கு இந்த விஷயமே தெரிய வந்தது.

மேலும் என் அக்காவிடம் என் பையனின் போட்டோவை காட்டி இதுதான் உன் மருமகன் என்று சொல்ல அவர் ஷாக் ஆகிவிட்டால் என் அம்மா ஹார்ட் பேஷண்ட் என்பதால் உண்மையை உடனடியாக நாங்கள் சொல்லவில்லை.

இதைத் தொடர்ந்து அந்தப் பையனை ஸ்வேதாவின் அக்கா மகன் என்று பொய் சொல்லி அவர்கள் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் அந்த குழந்தைக்கு நாங்கள் தான் தாய் தந்தையாக இருந்து வளர்ப்பதாகவும் சொல்ல அதனை அடுத்து எங்கள் திருமணம் நடை பெற்ற போது எங்கள் மகன் எங்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தான்.

அதுவும் மூத்த மகனை நடுவில் வைத்துத்தான் எங்கள் கல்யாணமே நடந்தது என்ற விஷயத்தை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார்.

இப்படித்தான் சமாளிச்சோம்..

இப்படித்தான் எங்களது வாழ்க்கை நகர்ந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு எங்களது வாழ்க்கை எப்படி தான் நகர்ந்து நாங்கள் அதை சமாளித்தோம் என்று சிரித்தபடியே பதில் அளித்தார்.

இந்த நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்ல ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version