Beautician to சீரியல் நடிகை.. போலீஸ் கணவர்.. விவாகரத்து.. சிறகடிக்க ஆசை மீனா பற்றி தெரியுமா..?

இன்று தொலைக்காட்சிகளில் எந்த சேனலை திரும்பினாலும் அந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் அம்மா வேடத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை எம்பி தமிழ்ச்செல்வி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது சிறகடிக்க ஆசை என்ற தொடரில் மீனாவின் அம்மாவாக நடித்து அனைவரது உள்ளத்திலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கக்கூடியவர்.

பியூட்டிஷியன் டு சீரியல் நடிகை..

இவர் ஆரம்ப நாட்களில் பியூட்டிஷியன் ஆக பணிபுரிந்ததை அடுத்து சீரியல் நடிகையாக மாறிய அதை உங்களுக்கு தெரிந்திருக்காது. இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மேலும் இவர் வளர்ந்து பெரியவர் ஆன பின்பு 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் மிகவும் சுவாரசியமானது கிட்டத்தட்ட ரோஜா படத்தில் வருவது போல தான் இவரது திருமணம் அமைத்ததாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் தன்னுடைய அக்காவை பெண் பார்க்க வந்த தனது கணவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக சொல்லி இருக்கக்கூடிய தமிழ்ச்செல்வி இவர் குடும்பமே போலீஸ்கார குடும்பம் என்பது மட்டுமல்லாமல் தன் கணவரும் ஒரு போலீஸ்காரர் என்பதை தெரிவித்தார்.

போலீஸ் கணவர் விவாகரத்து..

ஒரு டிராபிக் போலீஸ் என்பதால் அவர்கள் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பாத நிலையில் தன்னை அவர் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு மகன் மற்றும் மகள் இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் பியூட்டிஷியன் ஆக வேலை பார்த்த இடத்தில் விஷ்ணுவர்த்தனின் நெருங்கிய உறவினர் இவரிடம் ஒப்பனை செய்து கொள்ள வரும் போது எல்லாம் மிகவும் அழகாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

கரைப்பார் கரைக்க கல்லும் கரையும் என்பது போல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் சினிமாவில் வாய்ப்பு தேடலாம். சின்னத்திரையில் சேரலாம் என்பதை சொல் இவரைப் போல பல பேர் சொன்னதை எடுத்து திரை வாய்ப்பை பெறுவதற்காக முயற்சி செய்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை மீனா பற்றி தெரியுமா?

இதனை எடுத்து குடும்பத்தாரின் எதிர்ப்பையும் கணவரின் எதிர்ப்பையும் மீறி திரை உலக வாய்ப்புகளை தேடிய இவருக்கு பதில் அளிக்க கூடிய வகையில் அவர் கணவர் விவாகரத்து நோட்டீசை அனுப்பிய போது அவரை சமரசம் செய்து வைத்து தான் இந்த துறைக்குள் நுழைந்து இருக்கிறார். இதற் அவரது கணவரை ஒரு சந்தர்ப்பத்தையும் அமைத்து தந்திருக்கிறார்.

இதனை அடுத்து தனது கணவர் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை தக்க வழியில் பயன்படுத்திக் கொண்ட இவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் முதலில் சீரியல் நடித்திருக்கிறார் இதனை அடுத்து சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்து திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்கள் கிடைக்க அதையும் சரியாக செய்த இவர் சீரியல்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரசிகர்களின் மத்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் நல்ல ரீசை கொடுத்தது.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யோடு இணைந்து நடித்த கூடிய எம் வி தமிழ்ச்செல்வியை தற்போது வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த துறையில் ஜொலிக்க சப்போட்டாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஜில்லா படத்தில் விஜய்யோடு நடிக்கும்போது குட் மார்னிங் சொல்ல யோசித்த இவர் சரி சொல்லுவோம் என்று குட்மார்னிங் சொல்ல விஜய் சார் எழுந்து நின்று குட் மார்னிங் சொன்ன அதை இன்று வரை மறக்க முடியவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆற்றினார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam