” வாரத்துக்கு ஏழு நாட்கள்..! – ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் எது தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பொதுவாகவே நவகிரகத்தின் ஆளுமையால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதனை நாம் ஜோதிட ரீதியாக கூறினாலும் அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் இரண்டிலுமே இருக்கின்ற கருத்து ஒன்றுதான். எனவே கோள்களின் அடிப்படையில் வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளது. இந்த ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

திங்கட்கிழமை

பொதுவாக திங்கட்கிழமையை சோமவாரம் என்று அழைப்பார்கள். இந்த தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று நீங்கள் சிவனை வழிபடுவது சிறப்பை தரும். மேலும் இந்த நாளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்றவற்றை நீங்கள் படித்து வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அந்தஸ்து உயரும்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு வழிபடும் போது ஆறுமுக கடவுளுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவதின் மூலம் நீங்கள் கிடைத்த காரியம் எளிதில் நடக்கும். சஷ்டி கவசம் செவ்வாய்க்கிழமைகளில் படிப்பது நன்மையை கொடுக்கும்.

புதன்கிழமை

புதன்கிழமை  புதன்கிழமை அன்று நீங்கள் விஷ்ணு பூஜை செய்வது மிகவும் சிறப்பு இன்றைய நாளில் பெருமாளை தொழுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். துளசி மாடத்திற்கு பூஜை செய்வது நாலாயிர திவ்ய பிரபந்தங்களை படிப்பது அன்றைய நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு வளமையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை அன்று குரு பகவானை எண்ணி நீங்கள் வழிபாடு செய்யலாம். சாய்பாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்றவர்களை ஆராதிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வழிபாடு செய்வது இல்லத்துக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். அன்று பஞ்சமுக குத்து விளக்கை ஏற்றி  வழி விடுவதின் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்கள் வீட்டுக்கு வந்து சேரும். பொதுவாக அம்மன் மற்றும் அம்பிகைகளின் வழிபாடு வெள்ளிக்கிழமைகளில் நலன் தரும்.

 சனிக்கிழமை

சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்களை தொடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இறைநிலை அடைந்த அடியவர்களை, சித்தர்களை சனிக்கிழமைகளில் வணங்குவது சிறப்பானதாக இருக்கும்.

 மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தி அந்தந்த கிழமைகளில் அந்தந்த கடவுள்களை வணங்குவதன் மூலம் எனக்கு நன்மைகளை உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …