பாலியல் தற்கொலையை தடுக்க சில யோசனைகள்

பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அந்தப் பிள்ளைகளை சரியான வழியில் நடத்துவதோடு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருத்தல் அவசியம். 

இக்கட்டான  சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதோடு அவர்களை அந்த மன  உளைச்சலில் இருந்து வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும்  என்பதை அவசியம் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீண்டு வர சில யோசனைகள்:

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பள்ளி மாணவிகள் அதனை மன தைரியத்தோடு வெளிப்படுத்த கூடிய ஆற்றலை தனக்குள் அவசியம் வளர்த்தி கொள்ள வேண்டும்.

யாரிடம் இதனை வெளிப்படுத்தினால் உங்களுக்கு நியாயம் கிடைக்குமோ அவர்களிடம் மட்டுமே நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

தனக்குள் குற்ற உணர்வோடு, எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணி மன அழுத்தத்தால் பாதிப்பு அடையாமல் தன் எதிர்காலத்தை நினைத்து மீண்டு வர வேண்டும்.

உங்கள் எதிர் கால கனவு நிஜமாக உங்கள் திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அத்துடன் இது போன்ற நிகழ்வுகள் உங்களை உறுதிபடுத்த தான் என உறுதி கொள்ளுங்கள். 

மீண்டும் , மீண்டும் அது பற்றிய நிகழ்வினை உங்கள் எண்ண ஓட்டத்தில் ஓட விட வேண்டாம்.

அதற்கு உன் மனதில் முற்றுப்புள்ளியை வை. உன் திறன் மூலமாக எப்படி எல்லாம் உன்னால் முன்னேற முடியும் என்பது போன்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்த முற்படு.

மனத்தடுமாற்றம் ஏற்படாமல் தன்நம்பிக்கையுடன் சிறகை விரித்து, சிரித்த படி வா.

வளையல் அணியும் கைகளால் வாள் வீச முடியும் என்பதை உணர்ந்து தன்னம்பிக்கை யோடு செயல்பட்டால் தற்கொலை சிந்தனைகள் உங்களுக்கு ஏற்படாது. எப்போதும் தைரியமாக இரு. விரைவில் நீ அதில் இருந்து நீ மீண்டு எழுவாய்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …