இதுக்காகவே ஒரு ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன்..! இஸ்லாமிய நடிகை ஷபானா பரபரப்பு பேச்சு..!

உளவியல் ரீதியாக ஒரு உண்மை இருக்கிறது. இதை பலரும் நடைமுறையிலேயே உணர்ந்திருப்பார்கள்.

அதாவது ஒரு சிலரிடம் இதை செய்து விடாதே, இதை செய்து விடாதே, இதை செய்து விடாதே என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அவர்களே அதை விரும்பி செய்யும் ஒரு நில மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்பது தான் அந்த மாபெரும் உண்மை.

ஏனெனில் ஒன்றைச் செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம் என்று ஒருவரை தடுக்கும் போது, ஏன் அதை செய்தால் என்ன என்ற எதிர்மறை எண்ணம் அவர்களுக்குள் தானாகவே தோன்றி விடும்.

இது உளவியல் ரீதியாக கண்டறியப்பட்ட ஒரு உண்மை. மனிதர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு அடக்கி அடக்கி வைக்கும் போது, அதுவே ஒரு கட்டத்தில் அடங்க மறுத்து, அவர்களையும் அறியாமல் அந்த எதிர்மறை உணர்வு என்பது வெளிப்படும் என்பதுதான் இதில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.

செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா

நடிகை ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்து பிரபல நடிகையானவர். இந்த சீரியலில் செம்பருத்தி கேரக்டரில் நடித்ததற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஷபானா கேரளாவை சேர்ந்தவர். ஷபானா மும்பையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் படித்தவர். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

மலையாள சீரியலில் அறிமுகம்

கடந்த 2016 ஆம் ஆண்டில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள சீரியலில் நடித்து நடிகையாக ஷபானா அறிமுகமானவர். பிறகு தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி தொடரில் நடித்து மக்கள் விரும்பும் ஒரு நடிகையாக மாறினார்.

விஜய் ரசிகர்

ஷபானா மிகத் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, திகதி ஆரியன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கான காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அம்மாவும், பாட்டியும்

பிரபல சீரியல் நடிகையான ஷபானா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது என்னுடைய வீட்டில் என்னுடைய அம்மாவும் பாட்டியும் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால், ஒரு ஹிந்து பையனை மட்டும் திருமணம் செய்து கொண்டு விடாதே அது நமக்கு சரிவராது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சொல்லிக்கொண்டே இருந்தார்கள்

அதுவும், எப்படி என்றால் காலையில் எப்படி நாம் சாப்பிடுகிறோமோ இரவு எப்படி தூங்குகிறோமோ அது போல வாடிக்கையாக இந்த விஷயத்தை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஹிந்து பையனுடன் திருமணம்

ஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பாகி போய் திருமணம் செய்தால் ஒரு ஹிந்து பையனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதேபோல ஹிந்து பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார்.

இவருடைய அந்த பேட்டி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

என்னுடைய அம்மாவும், பாட்டியும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னதற்காகவே ஒரு ஹிந்து பையனை கல்யாணம் பண்ணேன் என்று இஸ்லாமிய நடிகை ஷபானா பரபரப்பு பேச்சு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam