பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொத்து மதிப்பு தெரிந்தால், நிச்சயம் தலைசுற்றி மயக்கம் வருமே உங்களுக்கு?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கதில் ‘உயிரே’ மற்றும் உலகநாயகன் கமலுடன் ‘ஹே ராம்’ படங்களில் நடித்தவர். அடுத்து ஷங்கர் இயக்கத்தில், இவருடன், நடிகர் விஜய் சேர்ந்து நடிப்பதாக, தகவல்கள் உள்ளன.

இப்போது ஷாருக்கான், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், ஜோடியாக, தமிழ் சினிமா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
சமீபத்தில், பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வந்த சக்கை போடு போட்ட படம், பதான். ஏறக்குறைய, 1,000 கோடி ரூபாய்க்கு மேல், வசூலை அள்ளிய படம். இந்திப்பட ஹீரோக்களில், எந்த நடிகர் படமும், இவ்வளவு வசூலை அள்ளியதாக, இதுவரை தகவல் இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்தி படங்கள், சரிவர வெற்றி பெறாத நிலையில், பதான் படத்தின் இமாலய வெற்றி, இந்தி படவுலகையே உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இந்நிலையில், விரைவி்ல வெளிவர உள்ள ஜவான் படம், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள பணக்கார சினிமா நடிகர்களில் முன்னணி பெற்ற ஒருவராக வலம் வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்த பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை கேள்விப்படும் அனைவருமே, வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.
ஷாருக்கானின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 6.150 கோடி இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, சமீபத்தில் ரூ. 10 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் என்ற காரை புதிதாக ஷாருக்கான் வாங்கியுள்ளார்.ஏற்கனவே இவரிடம் 7 கோடி ரூபாய் விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் மாடல் கார், ரூ. 4 கோடி மதிப்புள்ள பென்ட்லி கார், ரூ. 14 கோடி மதிப்புள்ள புகாட்டி வெல்ரான் கார்கள் இருக்கின்ற நிலையில், இந்த புதிய காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்டமழை கொட்டும் என்பது போல, ஷாருக்கான் வாழ்வில் பணமழையாக கொட்டுகிறது என, அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …