VJ சித்ரா மாதிரி பண்ண கூடாது.. அப்போ என்ன வா*லயா வச்சிட்டு இருந்த.. ஷகிலா ஒரே போடு..!

நடிகை ஷகிலா குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் அந்த மாதிரியான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களின் அளவுக்கு வசூலை கொடுத்தவர் நடிகை ஷகிலா அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்ளும் இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்த மற்றும் சுய வாழ்க்கை குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கை.

எப்படியான கேள்வியாக இருந்தாலும் கேட் போடாமல் மறைக்காமல் வெளிப்படையாக போட்டு உடைப்பது ஷகிலாவின் ஸ்டைல். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷகிலாவிடம், நடிகைகளை காதலிக்கும் நபர்கள் ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் பொழுது எதுவும் குறை கூறாமல் இருந்துவிட்டு பரஸ்பரம் காதலிக்க ஆரம்பித்த உடன் நடிகைகள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது அவர்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் கேட்பது உள்ளிட்ட விஷயங்களை செய்கிறார்கள். இது குறித்து உங்களுடைய பார்வை என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஷகிலா, அவன் உங்களை காதலிக்கிறான்.. நீங்கள் அவனுடைய காதலை ஒப்புக் கொள்ளும் போது பொசசிவ்னஸ் உடையவனாக மாறிவிடுகிறான். இதுதான் பிரச்சனை.

ஒருதலைப்பட்சமாக காதலித்துக் கொண்டிருந்த பொழுது என் மீது இருந்த குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. நான் எங்கு சென்றாலும்,, யாருடன் பழகினாலும்.. என்னை பின் தொடர்ந்து வருவது.. என்னை காதலிக்கிறேன் என்று நாய் போல கெஞ்சுவது.. பிறகு பரஸ்பரம் காதலிக்க ஆரம்பித்த பிறகு பல்வேறு விதிகளை விதிப்பது.

மேலும், அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டளைகளை செலுத்துவது தவறு. நான் நடிகை.. நான் இப்படியெல்லாம் நடிப்பேன்.. என் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும்.. என்று தெரிந்து தானே என்னை காதலித்தாய்.

அப்பொழுதெல்லாம் கேள்வி கேட்காமல் என்ன வாயிலயும்.. காதுலயும் என்ன வச்சிகிட்டு இருந்த.. என்னை பொறுத்தவரை VJ சித்ரா மாதிரி முடிவை எடுத்திருக்கக் கூடாது.

கேள்வி கேட்ட.. சந்தேகப்பட்ட.. அவனிடம், நான் உன்னை காதலிப்பதற்கு முன்பு என்ன பண்ணிட்டு இருந்த.. என் பின்னாலேயே சுத்திகிட்டு இருந்த.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நாய் மாறி கத்துக்கிட்டு இருந்த.. அப்பொழுது வாயில் என்ன வச்சிருந்த.. காதுல என்ன வச்சிருந்த.. இப்போ தான் நான் இப்படியெல்லாம் பண்றேனா.. எல்லாமே தெரிஞ்சு தானே லவ் பண்ண.. இப்போ என்ன கேள்வி கேக்குறன்னு கிழி கிழின்னு கிழிச்சிருப்பேன்  என்று கூறியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …