சுற்றி 300 பேர் இருக்கும் போது.. முதன் முறையாக அது கிழிந்தது.. அலறிக்கொண்டு ஓடினேன்.. ஷகீலா கூறிய பகீர் தகவல்..

நடிகை ஷகீலா, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக 1990களில் இருந்தவர். தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி கவர்ச்சி படங்களிலும் நடித்து, தன் தாராளத்தை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியவர்.

ஷகீலா

இப்போதும் ஷகீலா, சில படங்களில் நடிக்கவே செய்கிறார். டிவி சேனல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி, நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்து வருகிறார்.

சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தப்படியாக கவர்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் என்ற பெருமை நடிகை ஷகீலாவுக்கு உண்டு.

சில்க் ஸ்மிதாவின் தங்கை

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து நடிகை ஷகீலா பேசியிருக்கிறார். அவர் அதுபற்றி கூறியதாவது,

நடிகை சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில்தான் நான் அறிமுகமானேன். அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் தங்கை கேரக்டரில் நான் நடித்திருந்தேன். அப்போது எனக்கு வயது 16 தான். அந்த படத்தில் எனது தங்கையும் நடித்திருந்தாள்.

இதையும் படியுங்கள்: விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து..? வதந்தி என்று நினைத்த ரசிகர்கள்… இடியை இறக்கிய நயன்தாரா..

நீச்சல் தெரியாது

அந்த படத்தில் ஒரு காட்சியில் நான் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும். எனக்கு பின்னால் என் தங்கையும் குதிக்க வேண்டும். ஆனால் எங்கள் இரண்டு பேருக்குமே சுத்தமாக நீச்சல் தெரியாது. நாங்கள் அதுவரை நீச்சல் குளத்தில் குதித்ததும் இல்லை.

முதலில் நான் நீச்சல் குளத்தில் தைரியமாக குதித்து விட்டேன். என்னை தொடர்ந்து என் தங்கையும் குதித்து விட்டாள். ஆனால் அவள் என் மீது குதித்து விட்டதால், அப்படியே மேலே போய்விட்டாள்.

கீழே போய்விட்டேன்

ஆனால் நான் என் தங்கை என் மேல் குதித்த அழுத்தத்தில் இன்னும் தண்ணீருக்குள் கீழே போய்விட்டேன். எப்படி மேலே வருவது என்றே தெரியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். என்னால் மேலே வரவே முடியவில்லை.

அப்போது படப்பிடிப்பில் இருந்த ஒருவர், திடீரென தண்ணீருக்குள் குதித்து என்னை பிடித்து அப்படியே குளத்துக்கு மேலே கொண்டு வந்தார். அப்போது நான் அணிந்திருந்த பிகினி உடையின் மேலாடை கிழிந்து விட்டது.

இதையும் படியுங்கள்: சட்டையை கழட்டி விட்டு அது தெரிய ரம்யா பாண்டியன் கிளாமர் போஸ்.. அதிருது இன்ஸ்டா..

300க்கும் மேற்பட்டவர்கள்

அப்போது பக்கத்தில் வேறு ஏதோ நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருந்ததால் அந்த இடத்தில் நிறைய பேர் கூட்டமாக இருந்தனர். அதனால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.

அங்கிருந்த அனைவருமே என்னை பார்த்தார்கள். மேலாடை கிழிந்த நிலையில் இருந்த எனக்கு இது மிகப்பெரிய அவமானமாகி விட்டது.

ரூமுக்கு வேகமாக ஓடினேன்

அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், ஒரு துணியை என் மீது தூக்கி வீசினார். அதை போர்த்திக்கொண்டு நான் ரூமுக்கு வேகமாக ஓடிப்போய் விட்டேன். அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.

சுற்றி 300 பேர் இருக்கும் போது, முதன் முறையாக மேலாடை கிழிந்த நிலையில் ஓடிய ஷகீலாவின் அவல நிலை, அவர் ஒரு பருவப்பெண்ணாக சந்தித்த பெரிய வேதனையாக இருந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version