ஒரு படத்துல நடிக்கனும்ன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..

நடிகை ஷகீலா தனது 15-ஆவது வயதிலேயே திரைப்படத்துறையில் நடிக்க அறிமுகம் ஆனவர். இவர் ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்ததின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து நடிகை ஷகீலா மலையாளத் திரைப்படமான கிணரத் தும்பிகள் எனும் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களின் மனதில் ரீச் ஆனதோடு பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றார்.

நடிகை ஷகீலா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை ஷகீலா பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் நடித்த நடிகையாக விளங்குகிறார். இது வரை சுமார் 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து அசத்திய இவர் மறுமலர்ச்சி படத்தில் விவேகுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் ஜெயம் அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி இருப்பார்.

மலையாளத்தில் இவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் முன்னணி நடிகர்களின் படத்தை ரிலீஸ் செய்யாமல் பயந்து விடுவார்கள். அந்தளவு மலையாள திரை உலகில் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தான் நடிகை ஷகீலா. இவரை சைக்லோன், லேடி லால் என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.

ஒரு படத்துல நடிக்கணும்னு கூட்டிட்டு போவாங்க..

மலையாள திரைப்பட உலகம் இவரது படங்களுக்கு தடை விதித்ததால் கேரளாவில் இருந்து இவர் சென்னைக்கு வந்து குடியேறிவிட்டார்.

இதனை அடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் அடிக்கடி சின்னத்திரைகளுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தனது மறு பக்கத்தை பார்த்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை அன்போடு அம்மா என்று அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஷகீலா அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது இளம் வயதில் தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றினார்கள் என்ற விஷயத்தை ஓப்பனாக பகிர்ந்து இருக்கிறார்.

ஓப்பன் டாக்கால் அதிர்ச்சி..

அந்த வகையில் அவர் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் தன்னை ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று புக் செய்தார்கள். அதற்கான தேதியை கொடுப்பேன். அந்த தேதிகளில் என்னிடம் சொன்ன கதையை தாண்டி பல்வேறு காட்சிகளை படமாக்குவார்கள்.

நான் படத்துக்கு தேவையான காட்சியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்து விடுவேன்.

ஆனால் என்னிடம் ஒரு படத்திற்கு என்று சொல்லி படமாக்கப்பட்ட காட்சிகளை நான்கு படங்களில் நான்கு வெவ்வேறு படங்களில் இணைத்து ஷகீலா நடித்த படம் என்று நான்கு படங்களாக ரிலீஸ் செய்து விடுவார்கள். ஆனால் எனது சம்பளம் ஒரு படத்திற்கு மட்டும் தான் வரும்.

இப்படி ஒரு படத்துல நடிக்கணும்னு கூட்டிக்கொண்டு போய் நான்கு படத்தை நடிக்க வைத்து ஒரு படத்துக்கு மட்டுமான சம்பளம் கொடுத்து என்னை ஏமாற்றியவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அப்போது போதிய அளவு விவரம் போதவில்லை.

இந்நிலையில் வெளியே வந்து புகார் கொடுக்கும் அளவுக்கு அன்றைய சூழ்நிலை இல்லை என பதிவு செய்திருக்கிறார் நடிகை ஷகீலா. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் விவரம் தெரியாத வயதில் அவருக்கு நடந்த ஏமாற்று வேலைகளை யாருமே தட்டிக் கேட்காமல் விட்டு விட்டதை நினைத்து ரசிகர்கள் வேதனை அடைந்திருக்கிறார்கள். மேலும் இப்படி எல்லாம் நடக்குமா? என்று சிந்தித்தும் வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version