டபுள் கேம் விளையாடும் ஷகீலா.. நா கூசாமல் பயில்வான் மகள் குறித்து பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

மலையாள திரை உலகில் அடல்ட் ஃபிலிம் இல் நடித்து பேமஸான நடிகையாக திகழ்ந்த ஷகீலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

லேடிலால், சைக்ளோன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை ஷகீலா ஆரம்ப நாட்களில் அதிக அளவு மலையாள படங்களில் நடித்த இவர் இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

டபுள் கேம் விளையாடிய ஷகீலா..

மேலும் நடிகரும் திரைப்பட விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதர் யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகளை குறித்து அந்தரங்க விஷயங்களை அனல் பறக்க வெளியிடக்கூடிய யூடியூப் பிரபலம் பேசிய பேச்சு தற்போது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பயில்வான் பேசும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அவர் திரையுலகில் இருந்ததினால் கண்டிப்பாக அதில் சில உண்மைகள் இருக்கும் என்று பலரும் நம்புகிறார்கள்.

இவர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்த ரேகா நாயரை தாறுமாறாக பேச ரேகா நாயர் நேரடியாகவே பயில்வான்  பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் பதில் அடியை தந்ததோடு மட்டுமல்லாமல் பொது வெளியில் மல்லு கட்டினார்.

இதனை அடுத்து பலராலும் பாராட்டப்பட்ட ரேகா நாயரைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனைக்கு ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோர் தரமான சம்பவத்தை செய்தார்கள்.

பயில்வான் மகள் குறித்த பேச்சு..

எதைப் பேசினால் எது வரும் என்று தெரிந்து கொண்டே தேவையில்லாத விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடிய பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களை இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில் அவர் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி விவகாரம், இயக்குனர் பாலாவிற்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவகாரம் என பல்வேறு விஷயங்களை கழுவி ஊற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை குயிலி தொகுத்து வழங்க நடிகை ஷகீலா அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதில் நடிகை ஷகீலா உங்களது மகள் யாரை காதலிக்கிறார் தெரியுமா? அவள் காதலிப்பது ஒரு பெண்ணை என்று கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் உங்க நாக்கு அழுகும் என்று சொன்னார். 

அதற்கு ஷகீலா இவ்வளவு பேசுகிறீர்களே உங்க மகளை பற்றி சொன்னால் மட்டும் வலிக்கிறதா.அதே சமயத்தில் மற்ற நடிகைகள் அவர்களின் அம்மாக்களை பற்றி பேசும் போது வலிக்காதா? என்று தரமான பதிலடி கொடுத்தார்.

விளாசும் ரசிகர்கள்..

இதனை அடுத்து பயில்வான் ரங்கநாதன் ஷகீலாவின் வாய் அழுகிவிடும். விளங்கவே மாட்டா.. என் மகள் யாரையும் காதலிக்கவில்லை. மேலும் தன்பாலின ஈர்ப்பாளரும் இல்லை. இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் இருக்க இப்படி பேசுவது முறை அல்ல என்று தன்பாணியில் பேசியிருக்கிறார்.

அடுத்து தனக்கு என்றால் திமுக்கு திமுக்கு என்ற பழமொழியை நினைவு படுத்திய ரசிகர்கள் தனக்கு வந்தால் கஷ்டம் மற்றவர்களுக்கு வந்தால் அது வேற என்பது போல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த பிரச்சனையானது சமூக வலைதளங்களில் அதிக அளவு வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version