நான் முஸ்லீம் தான்.. எவன் எனக்கு இதையெல்லாம் பண்ணான்..? பதில் சொல்லுங்க.. நடிகை ஷகீலா தடாலடி..!

மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ஷகீலா தனது 15 வது வயதில் இந்த படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதையும் படிங்க: என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!

மலையாள ரசிகர்களால் லேடிலால், சைக்ளோன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படக் கூடிய இவரது படம் வெளி வருகிறது என்றாலே மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்முட்டி மோகன்லால் கூட சற்று பின்வாங்குவார்கள் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

நடிகை ஷகிலா..

நடிகை ஷகீலா பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் அதிக அளவு நடித்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாள படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்க கூடிய இவர் ஏறக்குறைய 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் சில படங்களில் குணசித்திர வேடத்திலும் நகைச்சுவை வேடத்திலும் நடித்த இவர் ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் சிறப்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரின் மறுபக்கத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவரை அம்மா என்று பாசத்தோடு அழைத்தார்கள்.

நான் முஸ்லிம் தான்..

ஒரு காலகட்டத்தில் மலையாள படங்களில் நடிப்பதற்கு தடையை விதித்ததை அடுத்து இவர் சென்னையில் குடியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டி அளிப்பதையும் மேலும் இவர் பல பிரபலங்களை பேட்டி எடுப்பதுமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

அத்தோடு அண்மையில் இவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டு இருப்பதோடு தான் ஒரு முஸ்லிம் தான். எனினும் முஸ்லிமாக இருந்த எனக்கு எதையெல்லாம் செய்தார்கள் என பதில் சொல்லுங்கள் என்று தடாலடியாக பேசிய விஷயமானது வைரலாகி உள்ளது.

இதற்குக் காரணம் ஒரு முறை இவர் நீதிமன்றத்திற்கு சென்ற போது புர்கா அணிந்து கொண்டு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்கள் சிலர் அவர் புர்கா அணியக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

எவன் எனக்கு பண்ணான்..

இதனைக் கூறியதோடு தொடர்ந்து பேசிய அவர் தான் புர்கா அணியக்கூடாது என சொல்ல அவர்கள் யார்? நான் தெரியாமல் கேட்கிறேன் நடிகை ரோஜா நீதிமன்றத்திற்கு வந்தால் புர்கா அணிந்து கொண்டு வருகிறார்.

பல்வேறு ஹிந்து நடிகைகள் கூட புர்கா அணிந்து கொண்டுதான் வருகிறார்கள். இதற்குக் காரணம் அந்த நடிகைகளை பொது வெளியில் பார்த்தால் அங்கே தேவை இல்லாமல் கூட்டம் கூடும்.

மேலும் தேவையில்லாத சலசலப்பு ஏற்படும் இதனால் தான் அவர்கள் புர்கா அணிந்து கொண்டு செல்வார்கள்.

முடிஞ்சா பதில் சொல்லுங்க..

அதே போலத்தான் நானும் புர்கா அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றேன். ஆனால் நான் ஒரு முஸ்லிம். மோசமான படங்களில் நடிக்கிறேன் என்பதற்காக புர்கா அணியக் கூடாது என்று என்னை மிரட்டினார்கள் இவர்கள் எல்லாம் யார்?

நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த போது என் வீட்டுக்கு வாடகை கட்ட வழியில்லாமல் இருந்த போது இவர்களெல்லாம் எங்கே சென்றார்கள். யார் எனக்கு வந்து உதவியாக நின்றது. என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமே வறுமையில் தவித்த போது இவர்கள் எங்கே இருந்தார்கள்.

இதையும் படிங்க: லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!

ஆனால் அப்போது என்னிடம் இருந்தது என்னுடைய உடல் மட்டும் தான். அதை காட்டித் தான் நான் பணம் சம்பாதித்தேன். இதில் உங்களுக்கு என்ன வந்தது. பதில் சொல்லுங்கள் என்று கோபமாகவும் தடாலடியாகவும் பேசிய விஷயம் பரபரப்பாக இணையங்களில் பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam