என்னைய பத்தி அப்படி ஒரு ஃபோட்டோவை போடுறாங்க..! வேதனையா இருக்கு… அதிர்ச்சியடைந்த ஷாக்சி அகர்வால்..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால். ஷாக்சி அகர்வால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார்.

சென்னையில் படிப்பை முடித்த பிறகு ஷாக்சி அகர்வாலுக்கு சினிமாவின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் படித்த படிப்பிற்கு ஏற்ற மாதிரி ஐடி வேலைக்குதான் முதலில் சென்றார். ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மாடலிங் துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்தது.

மாடலிங் துறையை பொருத்தவரை விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக வரும் அப்படியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

திரைத்துறையில் அறிமுகம்:

இயக்குனர் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில்தான் இவருக்கு முதன்முதலாக வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவருக்கு இருந்த வரவேற்பை தொடர்ந்து காலா மாதிரியான பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றார் ஷாக்சி அகர்வால்.

இதனை அடுத்து தமிழில் அதிக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4இல் வாய்ப்பை பெற்றார் ஷாக்சி அகர்வால். அதில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கவர்ச்சியாகவே இடம்பெற்று வந்தார் ஷாக்சி அகர்வால்.

அப்போதே அவருக்கும் நடிகர் கவினுக்கும் இடையே காதல் இருப்பதாக பேச்சுக்கள் எல்லாம் இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் என்பது இவருக்கு அதிகமாக துவங்கியது தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஷாக்சி.

மனதை வருத்திய வதந்தி:

சமீபத்தில் பிரபுதேவா நடித்த பஹிரா திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் ஷாக்சி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மனவேதனை ஏற்படுத்தும் விஷயம் குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்தபோது எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று ஒரு வதந்தி பரவியது. பிறகு அந்த நபரை நான் இப்பொழுது விவாகரத்து செய்துவிட்டேன் என்றும் அந்த நபர் இப்பொழுது நியூசிலாந்தில் வசிக்கிறார் என்றும் கிசுகிசு வந்தது.

அது மட்டுமல்லாமல் இதுதான் என்னுடைய திருமண போட்டோ என்று கூறி மார்ஃபிங்கில் போலியான ஒரு போட்டோவையும் வெளியிட்டு வந்தனர் இப்படி தினம் தினம் என்னை பற்றி ஏதாவது கிசு கிசு அப்பொழுது வந்து கொண்டே இருந்தது அது எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார் ஷாக்சி அகர்வால்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version