சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி – எக்குதப்பாக எகிறி கிடக்கும் எதிர்பார்ப்பு..!

நடிகர்களை கொண்டு மிக பிரம்மாண்டமான வரலாற்றுக் காவியத்தை படைத்த கொண்டிருக்கும் திரையுலகம் தற்போது நடிகை சமந்தாவை வைத்து மிகப்பிரம்மாண்டமான காதல் காவியான  படம் பிடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரி 2022 இல் வெளியானது. தொடர்ந்து இவர் ரசிகர்களின் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் மிக ஆர்வமாக இருந்தார்கள் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக படக்குழு தற்போது இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பதை அறிவித்து விட்டது.

இந்த படத்தில் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் இந்த வரலாற்று படைப்பை குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், பான் இந்திய திரைப்படமாக தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ளார்.

அத்தோடு சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். நவம்பர் 4ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகை சமந்தாவின் கனவு படமாக இருந்த இந்த படம் தற்போது நினைவாகி இருப்பதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த படத்தில் சமந்தாவின் அழகு மேலும் கூடியுள்ளது என்று கூறுமளவுக்கு போஸ்டர்களில் இவர் இருப்பதை பார்த்தால் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. நிச்சயமாக இந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை இவர்தான் இந்த இடத்தில் வேறு யாரையும் நாம் வைத்து பேச முடியாது என்று கூறும் அளவுக்கு  உள்ளது. தற்போது இந்த போஸ்டர் ஆனது வைரலாகி வருகிறது.

சாகுந்தலம் படத்துக்காக சமந்தா மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்ததாக தெரிகிறது வரலாற்று காவியமான இந்த காதல் காவியத்தை படம் பிடிக்கும்போது காளிதாஸ் எப்படி அதை எழுதினாரோ அதே தரத்தோடு மக்களுக்கு போய் சேர்க்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து இவர் நடித்ததாக படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …