இயக்குனர் சுந்தர் சி யின் பல நாள் கனவு திரைப்படமான “சங்கமித்ரா” எனும் சரித்திர திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டில் திட்டமிட்டு எடுக்கப்படுவதாக இருந்தது.
பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறகு திரைப்பட ரசிகர்கள் காவியமான வரலாற்று கற்பனை படங்களில் அதிகம் ஆர்வம் காட்டியதால் இந்த படத்தை சுந்தர் சி எடுக்க முற்பட்டார்.
“சங்கமித்ரா” திரைப்படம்:
மேலும் இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் ஃபர்ஸ்ட் போஸ்டர் 72 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படத்தில் முன்னதாக ஆர்யா மற்றும் ஜெயம் ரவி முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது இதில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அதன்பின் ஸ்ருதிஹாசனை வைத்து படம் எடுக்க முடியாது என படக்குழு கூறியதால் சுருதிஹாசன் விலகி விட்டார் என செய்தி வெளியாகியது.
அதை எடுத்து அப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கமிட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்தது.
இசையமைப்பாள ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், படம் தொடர்ந்து தாமதமானது.
7 வரும் கிடப்பில் போடப்பட்ட ” சங்கமித்ரா”:
கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருக்கிறது. அதற்கான காரணம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டில் பிலிம்ஸ் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கி இருப்பதாக காரணம் கூறப்பட்டது.
படத்தை எடுப்பதற்கான போதிய பணம் அவர்களிடம் இல்லை எனவும் அதனால் படப்பிடிப்புகள் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது எனவும் வெளிவந்த தகவல்கள் கூறியது.
இதனால் தொடர்ந்து இப்படம் கிடப்பிலே போடப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் படத்தின் நடிகர் நடிகைகள் வேறொரு படங்களில் தொடர்ந்து கமிட் ஆகத் தொடங்கி விட்டனர்.
அதன்படி ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்தார். தற்போது அப்படத்தின் ஹீரோயின் ஆன திஷா பதானி சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதனால் இந்த படம் அவ்வளவுதான் என ரசிகர்கள் எல்லோரும் அதன் ஞாபகமே இல்லாத அளவுக்கு மறந்துவிட்ட சமயத்தில் தற்போது திடீரென சங்கமித்ரா படத்தை பற்றி சுந்தர்சி ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.
வேற லெவல் அப்டேட் கொடுத்த சுந்தர் சி:
அதாவது பல நாட்கள் கழித்து தூசி தட்டி எழுப்புவது போல இந்த படத்தின் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் சங்கமித்ரா படம் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் முன்னர் அறிவிக்கப்பட்டபடி அதே நடிகர் நடிகைகள் தான் நடிப்பார்களா?
அதில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? உண்மையிலே படம் ஆரம்பிப்பார்களா என்பது தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
தற்போது சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் கூட அண்மையில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்திருந்தது.
இப்படம் இன்று மே 3ம் தேதி இன்று திரையரங்கங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.