அந்த நேரத்தில்.. என்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்.. கணவர் கொடுமை குறித்து சாந்தி வில்லியம்ஸ்..!

அவர் மிகவும் மோசமான, கொடுமையான மாமியார் என்று யாராவது அடையாளம் தெரியாத ஒருவரை சொன்னால், மெட்டி ஒலி, தென்றல் சீரியல்களை பார்த்தவர்களுக்கு சட்டென மனதில் தோன்றும் முகம் அது, சாந்தி வில்லியம்ஸ் முகமாக தான் இருக்கும்.

சாந்தி வில்லியம்ஸ்

ஏனெனில் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் சேத்தன் தாய் கேரக்டரில் சரோவுக்கு மாமியாராக நடித்து இருப்பார். அதே போல் தென்றல் சீரியலில், மகன் சஞ்சீவ் மனைவியான மருமகள் ஸ்ருதி ராஜை எப்போதும் மிரட்டிக்கொண்டும், கண்டபடி திட்டிக்கொண்டுமே இருப்பார் சாந்தி வில்லியம்ஸ்.

அதிலும் மெட்டி ஒலி சீரியலில், ஒரு கொடூர மாமியாரின், சம்பந்தியின் அத்தனை விதமான திமிரை, ஆங்காரத்தை டெல்லி குமாரிடம் காட்டி, அந்த கேரக்டரில் அப்படியே வாழ்ந்திருந்தார். இது கேரக்டர்தான் என்றாலும், அதை அப்படி நினைக்க முடியாத அளவுக்கு, அந்த மாமியார், சம்பந்தி கேரக்டரில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார் சாந்தி வில்லியம்ஸ்.

சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள சாந்தி வில்லியம்ஸ் தமிழில், மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் அம்மா கேரக்டரில் நடிக்க மிகச்சிறந்த நடிகை, குறிப்பாக மாமியார் கேரக்டரில் நடிக்க தேர்வாகும் ஒரு முக்கிய நடிகையாக சாந்தி வில்லியம்ஸ் இருக்கிறார்.

கசப்பான அனுபவங்கள்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை சாந்தி வில்லிம்ஸ் தனது திருமண வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதில் சாந்தி வில்லியம்ஸ் கூறியிருப்பதாவது, என் கணவர் பெயர் வில்லியம்ஸ். திரைப்பட ஒளிப்பதிவாளர். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள அவருக்கு, என்னை என் தந்தை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லியும் என் அப்பா கேட்கவில்லை.

இதையும் படியுங்கள்: சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

தற்கொலை செய்து கொள்வேன்

ஒரு ஷூட்டிங்கில் அழுக்கான சட்டையுடன், கரடு முரடான தோற்றத்தில்தான் வில்லியம்ஸை முதல் தடவையாக பார்த்தேன். யாரோ என்றுதான் அவரை நினைத்தேன். ஆனால் என்னை திருமணம் செய்யாவிட்டால், தற்கொலை செய்துக்கொள்வேன் என மிரட்டியே அவர் என்னை திருமணம் செய்துவிட்டார்.

அவரை திருமணம் செய்த பிறகு 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பிள்ளைகள் எங்களுக்கு பிறந்தன. என் கணவரின் வளர்ச்சியை பார்த்து, அவரது முதல் மனைவி மீண்டும் அவரிடம் வந்துவிட்டார். அதன்பிறகு என் கணவர் எனக்கு துரோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அடித்து துன்புறுத்திக் கொண்டே இருந்தார்…

நான் அவருக்கு உண்மையாக இருந்தேன். அவர் செய்த துரோகம் எனக்கு தெரிந்துவிட்டதால், என்னை அடித்து துன்புறுத்திக்கொண்டே இருந்தார். இதனால் நீங்கள் முதல் மனைவியுடன் சென்றுவிடுங்கள். எனக்கு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறிவிட்டேன். ஆனால் அதற்குள் அவரது மனைவி சிங்கப்பூர் சென்று விட்டார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அவரது திட்டம் நிறைவேறாமல் பாதியில் நின்றுவிட்டதால், அந்த ஆத்திரத்தில் எப்போதுமே என்னை அடிப்பார். யார் மீது கோபம் வந்தாலும் என்னை தான் அடிப்பார். தூக்கி போட்டு மிதிப்பார். அவரிடம் நான் அடிவாங்காத நாளே இல்லை என்று சொல்லலாம்.

பிரசவ நேரத்தில்

பிரசவ நேரத்தில் கூட அவரிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அந்த கொடுமை எல்லாம் என் குழந்தைகளுக்காக தாங்கிக்கொண்டேன் என, சாந்தி வில்லியம்ஸ் உருக்கமாக வேதனையுடன் கூறியிருக்கிறார்.

பிரசவ நேரத்தில் கூட என்னைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார் என்று கணவர் கொடுமை குறித்து சாந்தி வில்லியம்ஸ் கூறியிருப்பது, இந்த வில்லி நடிகைக்குள் இத்தனை வேதனையா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version