தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என அறிவித்தார்.
அந்த அளவுக்கு எம்ஜிஆர் மனதை, தனது கலைத்திறமையால் வென்றவர் கே.பாக்யராஜ். இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் கே பாக்யராஜ் மட்டுமே, என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கே பாக்யராஜின் மகன் ஷாந்தனு, தமிழ் சினிமாவில் ஹீரோவாக, 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவரது திறமை இன்னும் வெளிப்படவில்லை.
தனது படங்களில் பல பேரை அறிமுகப்படுத்தி, சிறந்த கலைஞர்களாக அவர்களை வெற்றி பெறச் செய்தவர் கே பாக்யராஜ். ஆனால் அவரது மகன் ஷாந்தனு, சினிமாவில் பெரிய நடிகராக இன்னும் வரவில்லை.
வேட்டிய மடிச்சுக்கட்டு என்ற படத்தில் பாக்யராஜ் – நக்மா நடித்த இந்த படத்தில் தனது மகன் கேரக்டரிலேயே ஷாந்தனுவை நடிக்க வைத்தார் கே பாக்யராஜ். அதில் சிறுவனாக இருப்பார் ஷாந்தனு.
அதன்பிறகு வளர்ந்து சக்கரக்கட்டி படத்தில் நடித்தார். அதற்கு பின் அவர் நடித்த எந்த படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
ஷாந்தனு – கீர்த்தி..
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியை, காதலித்து ஷாந்தனு திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு குழந்தை இல்லை.
ஷாந்தனு தொடர்ந்து திரைப்படத்துறையில் ஆர்வமாக நடித்து வருகிறார். கீர்த்தி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் பணியில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
சரியான நேரத்தில்..
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்ட ஷாந்தனு – கீர்த்தி, தங்களுக்கு இன்னும் குழந்தை இல்லாதது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
அப்போது ஷாந்தனு கூறுகையில், நாங்கள் திருமணம் உள்ளிட்ட எந்த விசேஷங்களுக்கு சென்றாலும், குழந்தை எப்போ என்று கேட்டு பலரும், டார்ச்சர் செய்கின்றனர்.
நாங்கள் இருவருமே எங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற முடிவு எதுவும் எடுக்கவிகல்லை. எது வரவேண்டுமோ, அது சரியான நேரத்தில் வரும் என்று கூறியுள்ளார்.
எட்டு வருஷம் ஆச்சு, இன்னும் ஏன் குழந்தை இல்லை என்று கேட்கும் பலருக்கும் இந்த பதிலின் மூலம் விளக்கம் கொடுத்து விட்டார் நடிகர் ஷாந்தனு.