கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.
பரதநாட்டிய கலைஞரான இவர் கூத்துப்பட்டறை மூலம் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான டூலெட் என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்ற கும்பலாங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது இயக்குனர் மோகன் ஜி அவர்கள் இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் தான்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஷீலா ராஜ்குமார். ஆனால் தனக்கு அறிமுகம் கொடுத்த திரைப்படத்தையே அடுத்த சில வருடங்களில் அந்த படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் கதை ஒரு மாதிரியாக சொன்னார்கள் படம் ஒரு மாதிரியாக எடுத்தார்கள் என திரௌபதி இயக்குனர் மீது குற்றம் சாட்டும் விதமான தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உங்களை ஒரு நடிகையாக பெருவாரியான ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது திரௌபதி திரைப்படம் தான்.
ஆனால், அதை அறியாமல் நீங்கள் அந்த படத்தையே தற்போது குறை கூறுகிறீர்கள் என்று பலரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்திலும் லூர்து என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார். இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார் இடையில் உதவி இயக்குனரை ஒருவரை திருமணம் செய்து கொண்டு சில மாதங்களில் அவரை விவாகரத்தும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஷீலா ராஜ்குமாரா இது…? நம்பவே முடியலையே..? தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிட்டாங்க.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.