பிறந்த மேனியாக இருப்பது தான் அவருக்கு.. பப்லூ குறித்து ஷீத்தல் ஓப்பன் டாக்..!

1966-ஆம் ஆண்டு பிறந்த பப்லு பிரிதிவிராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் நான்கு சுவர்கள், பாரத விலாஸ், அம்மா மனசு, டாக்டர் சிவா, நாளை நமதே நான் வாழவைப்பேன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

நடிகர் பப்லூ..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகர் பப்லு கே பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈத்தார்.

இதனை அடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பு அவள் வருவாளா போன்ற படங்களில் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சின்ன திரையை பொறுத்த வரை ரமணி வெர்சஸ் ரமணி, மர்மதேசம் போன்ற நெடுந்தொடர்களில் நடித்த இவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அத்தோடு ஜெயா டிவியில் ஒளிபரப்பான சவால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் இவரது சிறப்பான நடிப்பை ராதிகா தயாரித்து வழங்கிய அரசி என்ற சீரியலில் திருநங்கையாக நடித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர். மேலும் ராஜராஜேஸ்வரி, வாணி ராணி போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினிக்கு அப்பாவாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தன்னை விட வயது குறைந்த ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து பல விஷயங்கள் இணையத்தில் பரவியது.

பிறந்த மேனியாக இருப்பது தான்..

இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் பப்லு பிருதிவிராஜ் மற்றும் ஷீத்தல் திருமணம் செய்து கொண்டது குறித்தும் அதன் பிறகு அவர்கள் பிரிந்தது குறித்தும் புதிதாக சொல்லி தெரிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இருவரும் ஜோடி சேர்ந்த பொது வெளியில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்தனர்.

அப்போது புதுமண தம்பதிகளாக இவர்கள் கொடுத்த பேட்டிகள் எல்லாம் சுவாரஸியமானவை. அதில் குறிப்பாக திருமண வயதில் ஒரு மகன் இருக்கும் பொழுது உங்களுக்கு மகள் வயதில் இருக்கும் ஒருவருடன் திருமணம் தேவையா? பொம்பள சோக்கு உங்களுக்கு கேக்குதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு உங்கள் பதில் என்ன என்று பப்லுவிடம் கேட்டபோது.. கேக்குதே.. எனக்கு தினந்தோறும் பொம்பள சோக்கு கேட்கிறது.. என்னை பாருங்கள்.. நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன் எனக்கு என்ன பிரச்சனை..? என தடாலடியாக சொல்லியிருந்தார்.

பப்லூ குறித்து ஷீத்தல் ஓப்பன் டாக்..

அதுமட்டுமல்லாமல் எனக்கு ஒரு குறையும் இல்லை.. என கூறியிருந்தார். இவருடைய இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சிலர் பப்லுவிற்கு ஆதரவாகவும் பேசினார்கள்.

அதே பேட்டியில் ஷீத்தலிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் உங்களுக்கு என்ன லிப்ஸ்டிக் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த ஷீத்தல் இவருக்கு என்னுடைய உதடு எப்போதுமே பிறந்த மேனியாக இருப்பது தான் பிடிக்கும்.

வேறு வண்ணத்தில் இருக்கும் லிப்ஸ்டிக்கை இவர் விரும்ப மாட்டார் என பதில் அளித்து இருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version