பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகியான நடிகை செர்லின் கன்னடம் தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர். நடிகை தன்னுடைய பதினாறு வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானவர்.
கன்னடத்தில் வெளியான தர்ஷன் என்ற திரைப்படத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஷெரின் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இளமை ததும்ப ததும்ப தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகம்.. வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி குதிரையாக இருந்த நடிகை சேரின் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். இப்படி இருந்த நடிகை ஷெரின் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது உடல் எடையில் பாதியாக குறித்த இளைஞரின் தற்போது மீண்டும் உடல் எடை கூடி காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் கடற்கரை ஒன்றில் டூ பீஸ் உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு டிரஸ்ஸா..? என்று புலம்பி வருகின்றனர்.