அப்பா மகன் என இருவருடனும் ஜோடி போட்ட நடிகை.. யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் அப்பா, மகன் நடிகர்களாக நிறைய பேர் இருக்கின்றனர். அரசியலை போலவே, சினிமாவிலும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் தமிழ் சினிமாவில் மிக அதிகளவில் உள்ளனர். இது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் காணப்படுகிறது.

சினிமா வாரிசு நடிகர்கள்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முத்துராமன் மகன் கார்த்தி, சிவாஜி கணேசன் மகன் பிரபு, சிவக்குமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, முரளி மகன் அதர்வா, சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக், தியாகராஜன் மகன் பிரசாந்த் என குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதுமட்டுமின்றி இயக்குனர்களின் வாரிசுகளும் களத்தில் உள்ளனர். பாரதிராஜா மகன் மனோஜ், கஸ்தூரி ராஜா மகன்கள் தனுஷ், செல்வராகவன், கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என இப்படி பல பேரை சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்ந்து சினிமாவில் வாரிசுகள் வந்துக்கொண்டே இருக்கின்றனர்.

அப்பா நடிகர்கள்

ஆனால் வாரிசு நடிகர்கள் நடிக்க வரும்போது பெரும்பாலும் அப்பா நடிகர்கள் களத்தில் இருக்க மாட்டார்கள். அப்பாவும் நடித்து, மகனும் நடித்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் நடிக்காமல் ஒதுங்கி விடுவர்.

ஆனால் சத்யராஜ், சிவக்குமார் போன்றவர்கள் அப்பா கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சில நேரங்களில் வில்லன் கேரக்டர்களிலும் நடித்து அசத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்: “அவன் கிட்ட நான் எதுக்கு இதை பண்ணனும்..” புருஷனை பக்கத்தில் வச்சிகிட்டே உதார் விட்ட எருமசாணி ஹரிஜா..!

சிவாஜி கணேசன் – பிரபு

இப்படிப்பட்ட சூழலில், நடிகர் பிரபு நடிக்க வந்த போது அவரது அப்பா சிவாஜி கணேசன், சினிமாவில் முன்னணி ஹீரோவாக, அதுவும் டாப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சிவாஜியும் கதாநாயகனாக நடித்தார். பிரபுவும் கதாநாயகனாக நடித்தார்.

அம்பிகா

அப்போது 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் அம்பிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தார்.

அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் பல படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அம்பிகா பிரதான ஜோடியாக இருந்தார்.

இதையும் படியுங்கள்: “அதை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. டார்ச் லைட் அடித்து பார்த்தார்..” நடிகை டயானா விஷாலினி ஓப்பன் டாக்..!

இருவருக்குமே ஜோடியாக

இந்நிலையில் நடிகை அம்பிகாவுக்கு மிக நெருக்கடியான ஒரு சூழல் ஏற்பட்டது. அதாவது ஒரே சமயத்தில் அப்பா,மகன் இருவருக்குமே ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இரண்டு படங்களுமே மிக முக்கியமான படங்களாக இருந்தன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக வெள்ளை ரோஜா படத்திலும், நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக திருப்பம் என்ற படத்திலும் அம்பிகா நடித்துள்ளார்.

இமேஜ் பாதிக்கப்படுமோ

அப்பா, மகன் இருவருக்கும் ஜோடியாக நடிப்பதால் தனது இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற சிறிது தயக்கம் மனதுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்த படங்களில் தனது கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார் நடிகை அம்பிகா.

அவர் நினைத்தது போலவே, சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்தது அவரது திரை பயணத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

வழக்கம்போல அவருக்கு பட வாய்ப்புகள் வர, மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து நடித்து பல ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே அம்பிகா தமிழ் சினிமாவில் பவனி வந்தார்.

ஜோடி போட்ட நடிகை

அப்பா மகன் என இருவருடனும் ஜோடி போட்ட நடிகை அம்பிகா என்பதை போல, அவரது தங்கை ராதாவும் முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் சில படங்களில் ராதாவும் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version