“அட… நடிகர் ராஜசேகர்-ன் மகளா இது..?..” – தீயாய் பரவும் போட்டோஸ்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் ராஜசேகர்-ன் மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் ( Shivathmika Rajashekar ). தமிழ் சினிமாவில், இன்னும் பிரபலமடையாத பெயர். ஆனால், விரைவில் மிக பிரபலமாகும் பிரகாசமான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஏனென்றால், தமிழ் சினிமாவில் எக்கச்சக்கசக்க கவர்ச்சி காட்டும் நடிகைககளுக்கு போட்டியாக, இவர் களம் இறங்குவார் என்பதை, ஷிவாத்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களே உறுதிபடுத்துகின்றன.

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா ஆகியோரின் மகள்தான் ஷிவாத்மிகா. 23 வயதுகள் நிரம்பிய இளம் நடிகை.

shivathmika rajashekar

கடந்த 2000ம் ஆண்டில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தவர். தெலுங்கில் பல படங்களில், நடித்துவரும் இளம் நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகள் தெரிந்தவர் இவரது சகோதரியின் பெயர் ஷிவானி ராஜசேகர். அக்கா, தங்கை இருவரும் சினிமா தயாரிப்பாளர்களாக உள்ளனர். தெலுங்கு மொழி படங்களை தயாரித்து வருகின்றனர்.

ஷிவாத்மிகா ஐதராபாத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அப்பா, அம்மா இருவரும் சினிமா நடிகர்கள் என்ற நிலையில், சினிமா குடும்ப பின்னணி கொண்ட இவரும், சினிமாவில் நடித்த ஆர்வம் காட்டினார்.

shivathmika rajashekar

கடந்த 2019ம் ஆண்டில், டோராசானி என்ற தெலுங்கு படத்தில், ஷிவாத்மிகா அறிமுகமானார். இயக்குநர் கேவிஆர் மகேந்திரா இயக்கிய இந்த படத்தில், ஆனந்த் தேவரகொண்டா உடன், ஷிவாத்மிகா நடித்தார். விஜய் தேவரகொண்டா வின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கா –தங்கை இருவரும் இணைந்து, ஷிவானி ஷிவாத்மிகா மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதில், கல்கி என்ற தெலுங்கு படத்தை, இவர்கள் நிறுவனமே தயாரித்தது. பிரசாந்த் வர்மா இயக்கிய இந்த படத்தில், ஷிவாத்மிகாவின் அப்பா ராஜசேகர், முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

shivathmika rajashekar

ஷிவாத்மிகா, தமிழில் ஒரு படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகம் ஆகி இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்த, கவுதம் கார்த்திக் நடித்த, நந்தா பெரியசாமி இயக்கிய ஆனந்தம் விளையாடும் வீடு என்ற தமிழ் படத்தில், ஷிவாத்மிகா நடித்திருக்கிறார்.

ஷிவாத்மிகாவின் தந்தை, பிரபலமான தெலுங்கு நடிகர். டாக்டர் ராஜசேகர் படம் என்றால், ரசிகர்கள் மத்தியில் அனல் பறக்கும். குறிப்பாக, அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘இதுதாண்டா போலீஸ்’, மெஹா ஹிட்’ படம். அந்த காலத்தில் பிளாக்பஸ்டர் மூவியாக, ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம்.

shivathmika rajashekar

தெலுங்கில் முன்னணி நாயகனாக, பல ஹிட் படங்களை தந்தவர் ராஜசேகர். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவரது மனைவி ஜீவிதா அதாவது, நடிகை ஜீவிதா 1980களில் தமிழ் படங்களில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தவர்.

வளைகாப்பு, தப்புக்கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இனி ஒரு சுதந்திரம், ஏட்டிக்கு போட்டி, ராஜமரியாதை, தர்மபத்தினி, மவுனம் கலைகிறது, கண்ணை தொறக்கணும் சாமி, எனக்கு நானே நீதிபதி, பாடும் பறவைகள், சோலை புஷ்பங்கள், இது எங்கள் ராஜ்ஜியம், பாடும் வானம்பாடி, சுகமான ராகங்கள், உறவை காத்த கிளி போன்ற படங்களில், அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர்.

shivathmika rajashekar

இப்படி நட்சத்திர தம்பதி மகளாக இருக்கிற ஷிவாத்மிகா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் படங்களை அப்டேட் செய்திருக்கிறார். புகைப்படங்களை பார்க்கும்போது, தமிழில் அம்மணி ஒரு கலக்கு கலக்குவார் என்றுதான் தோன்றுகிறது. போட்டோஸ் பாருங்க… மெரண்டு போயிடுவீங்க.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …