என் தலையில் ஆணுறையை மாட்டிவிட்டு.. கமல்ஹாசன் குறித்து ஜனகராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல குணசேத்திர நடிகரும் நகைச்சுவை நடிகரும் ஆன ஜனகராஜ் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலாக நகைச்சுவை காட்சிகளிலும் குணசத்திரக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

இவர் கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு போட்டியாக தனி ஆளாக களம் இறங்கி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென தனி தடை அடையாளத்தை பிடித்தார்.

நடிகர் ஜனகராஜ்:

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இவர் தனது திரைப்படத்தை தொடங்கி பின்னர் கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலமாக திரைத்துறையில் நுழைந்தார்.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பையும் பெற்றார். தொடர்ந்து வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கான அடையாளத்தை தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

எவ்வளவு சீரியசான ஆன கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னுடைய நகைச்சுவையை திணித்து அதில் மிகச் சிறந்த நடிகையாகவும் நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.

ரஜினி மற்றும் கமல்ஹாசனுடன் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும்.

ஜனகராஜ் நகைச்சுவை காட்சிகள் அத்தனை படத்திலும் இடம்பெறும் அளவுக்கு எல்லா திரைப்படங்களில் அவரை நடிகராக போட்டு வந்தனர்.

90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகராக ஜனகராஜ் முன்னணி இடத்தை பிடித்திருந்தார்.

அமெரிக்காவில் செட்டில்:

பாண்டியன், நாயகன், படிக்காதவன் ,ஆண் பாவம், பாட்ஷா , ராஜாதி ராஜா, அக்னி நட்சத்திரம் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் இன்றளவும் பேசக் கூடியதாக அமைந்திருக்கிறது.

வயது முதிர்ச்சியடைய ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் நடிக்க முடியாமல் போக நடிப்பிலிருந்து விடை பெற்று தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

உடல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் . அதன் பிறகு மீண்டும் பல வருடங்கள் கழித்த விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் ஜனகராஜ் ரோலை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தார்கள். அவர் இறந்து விட்டதாக பொய் வதந்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 96 திரைப்படம் அவருக்கு அமைந்தது.

மீண்டும் பல வருட கேப்புக்கு பிறகு ஜனகராஜ் மூத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தாத்தா என்ற குறும்படத்தில் கூட இவர் நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனி அடையாளத்தை தக்க வைத்த ஜனகராஜ்:

அந்த போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஜனகராஜ் உரித்தான அடையாள டயலாக் என எடுத்துக்கொண்டோமானால்,

நைனா, தங்கச்சியை நாய் கடிச்சிருச்சு, என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா போன்ற வசனங்கள் இன்றும் மீம்ஸ் டெப்ளேட்டாக பல இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஜனகராஜ் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அவருக்கு என்னதான் ஆகிவிட்டது இவ்வளவு மோசமாக மெலிந்து விட்டாரே என நெட்டிசன்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

69 வயதாகும் ஜனகராஜ் கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து விட்டு செல்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில். நடிகர் கமல்ஹாசன் உடன் சத்யா திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார் ஜனகராஜ்.

ஜனகராஜ் தலையில் ஆணுறை மாட்டிவிட்ட கமல்:

அதாவது, சத்யா படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் கமலஹாசன் என்னை பார்த்தார். திடீரென கையில் ஒரு ஆணுறையுடன் ஓடி வந்தார்.

என்ன ஏது என்று கேட்பதற்குள் அதனை என்னுடைய தலையில் மாட்டிவிட்டு இந்த படத்தில் நீ நாயுடுவாக நடிக்கிறீங்க என்று கூறினார்.

அப்போது நான் தலையில் நிறைய முடி வைத்திருந்தேன். அதனால் தலையில் ஆணுறுயை மாட்டிவிட்டு மொட்டை தலை போல் ஆக்கிவிட்டார்.

அதன் பிறகு மேலே நாயுடு கெட்டபில் விக் வைத்து நடிக்க வைத்தார். அந்த நேரத்தில் தெலுங்கு படங்களில் அனைத்து நடிகர்களும் விக் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை கலாய்க்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இப்படி ஒரு காட்சியை வைத்திருந்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகர் ஜனகராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version