90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆங்கர் ஆன VJ அர்ச்சனா. 1999இல் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோதே ஜெயா தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்று இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுபளினியாக அப்போது பார்க்கப்பட்டு வந்தார்.
தொகுப்பாளினி அர்ச்சனா
இதனிடையே அர்ச்சனா வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாரா என்ற ஒரு மகள் பிறந்தார்.
திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு 2007 ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சியை விட்டு விலகி தனது குடும்பத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் .
இதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகியிருந்தார்.
அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மிகப்பெரிய கேப் விழுந்தது.
பின் மீண்டும் 2015ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.
அதை அடுத்து ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார் VJ அர்ச்சனா.
இரண்டாவது இன்னிங்சில் கலக்கிட்டாங்க
அந்த நிகழ்ச்சியில் நடுவராக பாக்கியராஜ் மற்றும் குஷ்பூவுடன் கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சூப்பர் மாம்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மீண்டும் தனக்கான அடையாளத்தையும் பிரபலத்தையும் அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்படுத்திக் கொண்டார்.
ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுத்து வரும் VJ அர்ச்சனா நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் திறமை மிக்கவர்.
மேடையில் ரொமான்ஸ்:
தொடர்ந்து ஜீ தமிழ் …விஜய் தொலைக்காட்சியை இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் VJ அர்ச்சனா தற்போது ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பொம்மை ஒன்றை கட்டியணைத்து ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக இதை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் “அந்த பொம்மையாக நாங்க இருக்கக் கூடாதா?” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.