உங்கள் வீட்டில் ஷோகேஸ் இருக்கிறதா? அதை அழகாக்க நீங்கள் இந்த முறையை பின்பற்றலாமே..!

இன்று பெரும்பாலான வீடுகளில்  ஷோகேஸ் வைப்பது என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. இந்த ஷோகேசுகளை தேக்கு மரத்தால் அலங்கரித்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் தற்போது மரங்களுக்கு பதிலாக பிவிசி தடுப்புகள் மூலமும் அலுமினிய தகடுகள் மூலமும் ஷோகேஸ் அழகாக செய்யப்படுகிறது.

நீங்கள் இந்த சோகேஸிக்குள் என்னென்ன பொருட்களை வைத்தால் கூடுதல் அழகாக இருக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

ஷோகேஸ் பராமரிப்பு

💐வீட்டின் சுவற்றில் சுவரின் நிறத்துக்கு ஏற்ற விதத்தில் நீங்கள் ஷோகேசின் வண்ணத்தை சரியாக பூச வேண்டும். அதுமட்டுமல்லாமல் பூச்சிகள் ஷோகேசுகள் சென்று கூடு கட்டாமல் இருப்பதற்காக நாப்தலின் பால்களை அதனுள் போட்டு வைப்பது மிகச் சிறந்ததாகும்.

💐 இதன் மூலம் சிலந்தி மற்றும் பல்லிகளின் தொல்லைகளில் இருந்து நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை பாதுகாக்க முடியும். மேலும் நீங்கள் பெற்ற விருதுகள், பதக்கங்கள், பரிசுகள் போன்றவற்றை ஷோக்கேஸில் வைக்கும் போது வீட்டுக்கு வந்து அதை பார்ப்பவர்கள் உங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

💐 மேலும் அரிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை ஷோகேஸ் இன் மேல் பகுதியில் வைப்பது மிகவும் சிறப்பாக இருக்கலாம்.

💐ஷோகேஸ் இல் வைக்கக்கூடிய பொம்மைகளுக்கு சின்ன சின்ன துணிகளை கொண்டு அழகான ஆடைகளை செய்து கடை நயத்தோடு உடுத்து விடுவதின் மூலம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

💐 மேலும் இந்த சோக்கேஸில் இரண்டு பக்கங்களிலும் நீங்கள் பூ ஜாடிகளை வைத்து வண்ண வண்ண பூக்களை வைத்து விடுவதன் மூலம் பார்ப்பவர்களின் கவனத்தை அது ஈர்க்கும் வகையில் இருக்கும்.

💐 வாரத்துக்கு ஒரு முறை ஷோகேஸ் கண்ணாடியை நீங்கள் நன்கு துடைத்து வைக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் மாதத்திற்கு ஒரு முறை ஷோகேஸ்சில் வைத்துக்  இருக்கும் பொம்மைகளை எடுத்து சுத்தமாக துடைத்து வைப்பதின் மூலம் ஷோகேஸ் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் இருக்கும் ஷோகேஸ் போல எந்த வீட்டிலும் இல்லை என்று அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …