ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையான ஸ்ரேயா சரணின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை ஸ்ரேயா சரண் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கால்பந்து ஆட்ட பயிற்சியாளர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். அதுவரை தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் ஸ்ரேயா.பிறகு 2005 ஆம் ஆண்டு ‘மழை’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் வருகை தந்தார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் கவர்ச்சி காட்டிய நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

மேலும் 2006 ஆம் ஆண்டு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரணுக்கு இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

பிறகு தமிழ்நாட்டில் மிக முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டாருடன் ‘சிவாஜி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் ஸ்ரேயா சரண். நிறைய ஹீரோயின்களுக்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் ஆசை இருக்கும் பட்சத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நடித்த இரண்டு படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் நடிகர் விஜயுடன் ‘அழகிய தமிழ் மகன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

இந்நிலையில் நிறைய படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா சரணுக்கு திருமணம் ஆன பிறகு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுள்ளார்.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …