சிறுவயதில் இருந்தே அந்த பழக்கம்.. தற்போது மரண வேதனை.. ஸ்ருதிஹாசன் குறித்து வெளியான ரகசியம்..!

தமிழில் எளிமையாக கதாநாயகியாக வாய்ப்பை பெற்ற வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசனும் ஒருவர். பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடாது.

ஆனால் அவர்களது தந்தை ஏற்கனவே பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். சுருதிஹாசனை பொறுத்த வரை அவர் முதலில் தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சிக்கவில்லை.

பாலிவுட்டில் பெரிதாக வரவேண்டும் என்பதுதான் சுருதிஹாசனின் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழை விடவும் பாலிவுட்டில் வாரிசு அரசியல் என்பது அதிகமாகும். அங்கு ஏற்கனவே இருக்கும் நடிகர்களின் பிள்ளைகள்தான் தொடர்ந்து நடிகைகள் ஆகி வந்து கொண்டிருந்ததால் இவரால் உள்ளே நுழைந்து நடிகை ஆக முடியவில்லை.

தமிழில் கிடைத்த அறிமுகம்:

அதனை தொடர்ந்துதான் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தை பார்த்த பலருக்கும் சுருதிஹாசன் மீது அதிருப்திதான் ஏற்பட்டது.

ஆனால் அதனை தொடர்ந்து அவர் தனுசுக்கு ஜோடியாக நடித்த 3 திரைப்படம் உண்மையாகவே சுருதிஹாசனுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து தமிழில் வரவேற்பு பெற்று தெலுங்கு சினிமாவிலும் முக்கியமான ஒரு நடிகையாக மாறினார். தற்சமயம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக சுருதிஹாசன் இருந்து வருகிறார்.

உடல் பிரச்சனை:

இந்த நிலையில் சுருதிஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் சுவாரஸ்யமான சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சுருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறியதாக இந்த விஷயங்களை கூறியிருந்தார்.

அதாவது சிறு வயதிலிருந்து சுருதிஹாசனுக்கு மதுபழக்கமும் சிகரெட் பழக்கமும் இருந்தது. ஏனெனில் சுருதிஹாசன் வெளிநாட்டில்தான் சிறு வயது முதலே படித்து வந்தார். இந்த நிலையில் இந்த பழக்கங்களால் அவருக்கு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதனால் வயதுக்கு வந்த காலம் முதலே மாதவிடாய் காலங்களில் மரண வேதனை ஏற்படும் ஒரு நோய் சுருதிஹாசனுக்கு ஏற்பட்டது. இதனால் அதிக வலியாக இருக்கும். மேலும் ரத்தப்போக்கும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் படப்பிடிப்புகளில் நடிக்கும் பொழுதே சில சமயங்களில் மாதவிடாய் வந்துவிடும்.

அவர்களிடம் போய் மாதவிடாய் காரணமாக படப்பிடிப்பை நிறுத்த சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் லட்சங்களில் பணத்தை போட்டு படத்தை எடுக்கின்றனர். எனவே எதுவும் சொல்லாமல் பல முறை வலியை தாங்கிக் கொண்டு நடனமாடி இருக்கிறேன் என்று சுருதிஹாசன் கூறி இருக்கிறார்.

மேலும் நடிப்பு என்று வந்துவிட்டால் உடல் வலியை பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்று சுருதிஹாசன் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version