3 காதல்.. 3 ப்ரேக் அப்.. கன்னித்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நெட்டிசன்..! ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு சினிமா துறையில் நடிப்பின் மீது அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. பாடல்கள் பாடுவதிலேயே அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார் ஸ்ருதிஹாசன்.

இந்த நிலையில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பாலிவுட்டில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

ஏழாம் அறிவு திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றாலும் அது அவருக்கு ஒரு அறிமுக திரைப்படமாக அமைந்திருந்தது.

ஸ்ருதிஹாசன் காதல் விவகாரம்:

அதன் பிறகு அவர் நடித்த 3 திரைப்படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை பெற துவங்கினார் ஸ்ருதிஹாசன். இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்த ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கு சினிமாவில் தமிழை விடவும் அதிகமான வரவேற்பு கிடைக்கத்துவங்கியது.

இந்த நிலையில் தொடர்ந்து காதல் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் சித்தார்த்துடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் அது மிக குறுகிய காலங்களே நீடித்ததாக கூறப்படுகிறது இத்தனைக்கும் சித்தார்த் கமலஹாசனின் தீவிர ரசிகராக இருந்த போதும் கூட  ஸ்ருதிஹாசனுடன் அவரது காதல் என்பது பெரிதாக எடுபடவில்லை என்றே கூற வேண்டும்.

காதல் தோல்வி:

அதற்குப் பிறகு மீண்டும் இசையில் ஆர்வம் செலுத்தி வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலும் பிறகு கைகூடாமல் சென்றது. எத்தனை முறை காதல் தோல்வி அடைந்தாலும் கூட ஸ்ருதிஹாசன் காதலிப்பதை நிறுத்துவது கிடையாது.

அந்த வகையில் மூன்றாவதாக தற்சமயம் சாந்தனு என்னும் ஒரு நபரை காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவரைதான் ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நடுவே இசை அமைப்பதிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இனி சில திரைப்படங்களுக்கும் அவரே இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி அவரிடம் சர்ச்சைக்குள்ளான கேள்விகளை ரசிகர்கள் கேட்பது வழக்கம்.

சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவு ஒன்றின் கீழே வந்து நீங்கள் வெர்ஜினா என்று ஆங்கிலத்தில் தவறான ஸ்பெல்லிங்கில் எழுதி ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் முதலில் வெர்ஜின் என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு நான் வெர்ஜுனா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இது அதிக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version