ரஜினி மகளுக்கு போட்டியாக, களத்தில் இறங்கும் கமல் மகள் ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இளைய மகள் அக்‌ஷரா. இருவருமே, தந்தையை போல சினிமாவை நேசிப்பவர்கள்தான் ஸ்ருதிஹாசன், நல்ல பாடகி. சினிமாவிலும் பாடி இருக்கிறார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

குறிப்பாக ஏழாம் அறிவு, 3, புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்திலும், தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

ஸ்ருதியின் தந்தை நடிகர் கமல்ஹாசன் கவிதை எழுதுவார். திரைக்கதை எழுதுவார். திரைப்படம் இயக்குவார். அதே பாணியில், ஸ்ருதிஹாசனும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கவிதைகளை எழுதுகிறேன். திரைக்கதை எழுதி வருகிறேன். என்னிடம் முழு ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எழுதி வைத்திருக்கிறேன். புதிய பயணத்தை விரைவில் துவங்குவதற்காக காத்திருக்கிறேன், என்று கூறி இருக்கிறார்.

தந்தை கமலை போலவே, ஸ்ருதிஹாசனும் 16 அடி பாய்வாரா, என்பது போக போகத்தான் தெரியும், ரஜினியும் – கமலும், நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும், தொழிலில் போட்டியாளர்கள்தான். அதுபோல், இனி ரஜினி மகள் ஐஸ்வர்யாவும், கமல் மகள் ஸ்ருதியும் இயக்குநர்களாக போட்டியிடுவார்களா, என பொறுத்திருந்து பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …