ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ) தெலுங்கில் அதிக படங்கள் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை. அவரது உடல் தோற்றமும், குரலும் தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தரவில்லை என கூறப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் என்ற நட்சத்திர அந்தஸ்து கொண்டவர். இவரது தங்கை, கமலின் இளைய மகள் அக்ஷரா. இருவருமே, தந்தையை போல சினிமாவை நேசிப்பவர்கள்தான் ஸ்ருதிஹாசன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர், நல்ல பாடகியாக, பல பாடல்களில் தன்னை நிரூபித்திருக்கிறார்.
சினிமாவிலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
Shruti Haasanதமிழில் இவர் ஏழாம் அறிவு படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுமானார். அடுத்து 3, புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்திலும், தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆனால், படங்களில் நடிப்பதில், பட வாய்ப்புகளை தேடிச் செல்லும் பழக்கம், ஸ்ருதியிடம் இல்லை.ஆனால், அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மட்டும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி விடுகின்றன. இவரது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிப்பதற்காக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
Shruti Haasanகமல்ஹாசனின் முதல் மனைவி வாணி, இவருடன் சில காலம் வாழ்ந்த கமல்ஹாசன் அவரை பிரித்து சரிகாவை திருமணம் செய்துகொண்டார். சரிகாவின் மகள்கள்தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். சரிகாவையும், ஒரு கட்டத்தில் பிரிந்த கமல்ஹாசன் அதன்பின்பு நடிகை கவுதமியுடன் 17 ஆண்டுகளாக, லிவிங் டு கெதர் என்ற முறையில் வாழ்ந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்த பிரிவுக்கு காரணம், ஸ்ருதிஹாசனுக்கும் கவுதமிக்கும் ஏற்பட்ட மனக்கசப்புதான் என்ற தகவலும் பரவியது.
Shruti Haasanகமல்ஹாசனை பொருத்தவரை மூன்று பெண்களுடன் வாழ்ந்தும், இன்று அவர் முரட்டு சிங்கிள் என்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். அரசியல்,சினிமா, பிக்பாஸ் என எப்போதும் பிஸியாக காணப்படுகிறார். ஆனால், ஸ்ருதிஹாசன் 38 வயதுகள் கடந்தும் இன்னும் திருமணமாகாமல், காதலருடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
Shruti Haasanஅவரது இந்த போக்கு காரணமாகவே, தமிழ் படங்களில் அதிகளவில் அவருக்கு வாய்ப்பு தர இயக்குநர்கள் யோசிப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. கமல்ஹாசன் உலக நாயகன் என போற்றப்படும் நிலையில் ஸ்ருதிஹாசன் நல்ல நடிகையாக, பாடகியாக இன்னும் பெயர், புகழ் பெறும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என, கமல் ரசிகர்கள் விரும்புகின்றனர். கமல்ஹாசனுடன் இருந்தால், ஒரு படத்தில் நடித்தால் சினிமா தொழில் சார்ந்து நிறைய நுட்பங்களை, தொழில் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர். ஆனால், சொந்த மகளாக இருக்கும் ஸ்ருதி, தந்தையை விட்டு பிரிந்து, மும்பையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.
Shruti Haasanஎனினும், தமிழ் படங்களில் நடிக்கா விட்டாலும் இன்ஸ்டாகிரராம் பக்கங்களில் தனது கிளாமர் ஸ்டில்களை பதிவிட்டு, ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறார். அந்த வகையில், ஆங்கில படங்களில் நடிக்கும் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு, தனது கிளாமர் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் அப்டேட் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.